மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேர முக்கிய நிகழ்வுகள்..ஒரே நிமிடத்தில் தெரிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் புதிய ஆட்சியர்கள் நியமனம்
- 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை - அக்டோபர் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல்
- அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு - தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைப்பு
- தஞ்சை வேளாண் கல்லூரி இனி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி என அழைக்கப்படும் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- சுங்கச் சாவடிகள் வேண்டாம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி - நாளை (அக்டோபர் 13) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
- தண்டனை காலத்தை நிறைவு செய்த இஸ்லாமிய கைதிகளை போர்கால அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி - அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை காலை 4 மற்றும் 7 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது
- காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்தியா:
- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
- பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
- ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம் - முகூர்த்த நாளாக இருப்பதாக நவம்பர் 23 ஆம் தேதிக்கு பதில் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு
- யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு பதிலாக உருவாக்கப்படும் இந்திய உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
- காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் செல்போனில் கேம் விளையாடியதால் சர்ச்சை
- இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு போலி டிக்கெட்டுகளை விற்ற 4 பேர் கொண்ட கும்பல் கைது
- இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் அஜய்” திட்டம் - மத்திய அரசு நடவடிக்கை
- லதா ரஜினிகாந்துக்கு எதிரான பண மோசடி வழக்கை விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
உலகம்:
- இங்கிலாந்து விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து - பல விமானங்கள் ரத்து
- இங்கிலாந்தில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனி விமானம் மூலம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்
- ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் சேரும் ரஷ்யாவின் முயற்சி மீண்டும் தோல்வி
- பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷாகீத் லத்திப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
- காசாவில் எரிபொருள் தீர்ந்த நிலையில் மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி
விளையாட்டு:
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் - இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
- ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 7வது இடத்துக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2024
திரை விமர்சனம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion