கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.. பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி..!
கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கின்றனர். இதன் காரணமாக கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
ஷிட்லகட்டாவில் டிஜிட்டல் மீடியா பணியாளர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். அப்போது பேசிய அண்ணாமலை காங்கிரஸை கடுமையாக சாடினார், அப்போது பேசிய அவர், “ பாஜகவில் அனைத்து சாதியினரும் உள்ளனர், கர்நாடகாவில் ஒரு சமூகத்திற்கு கரும்புள்ளியை ஏற்படுத்துவது போல் காங்கிரஸ் செய்கிறது. இதற்கு எதிராக அனைத்து சாதியினரு ஒன்றிணைய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி சாதி அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறது. காங்கிரஸில் இருந்த ஒரு சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். கன்னடர்கள் அனைவரும் எவ்வளவு நல்லவர்கள் என்பது தமிழனாக எனக்கு தெரியும். மே 10 ம் தேதி பாஜக 130 ஐ தாண்டி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டரை வட கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளனர். இதை உள்ளூர் தலைவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். காங்கிரஸுக்கு யாராவது போனால் கைகுலுக்கி சால்வை வீசுவது வழக்கம், ஒரு காரில் பெட்ரோல் தீர்ந்தால் இன்னொரு காரை எடுத்து செல்வது வழக்கம். அதுபோல் இருக்கிறது காங்கிரஸ் காரர்களில் செயல்.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி ஹீரோ, பாஜகவுக்கு செயல்வீரர்கள் ஹீரோக்கள். நமது செயல்வீரர்கள் ஹீரோக்களாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. பா.ஜ.,வில் தோற்று, துணை முதல்வராக பதவியேற்றார் மேலு. எம்எல்சி கொடுத்துள்ளோம். நான் சும்மா உழைக்கிறேன். ஆனால், கர்நாடகா மாநிலம் ஏடிஎம் என தெரிய வந்துள்ளது என்று காங்கிரஸை கடுமையாக சாடினார் டி.கே.சித்த ராமையா.
கர்நாடகா மாநிலத்தில் மதவாத கலவரத்தை உருவாக்க முடியாது. மங்களூரில் 144 தடை உத்தரவு 180 நாட்கள் அமலில் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத கலவரத்தை உருவாக்கவில்லை, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி முதலில் வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலுக்கு தயாராகும் பாஜக:
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக பாஜக ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது. பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கர்நாடகாவில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.