PM Modi: திருப்பூர் குமரன் - சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்! ”வாழ்வையே அர்ப்பணித்தவர்கள்” - தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
PM Modi: திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PM Modi: திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாள்:
தேச விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடி, உயிர் துறந்த தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாள் இன்று (அக்டோபர் 4) கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தனர்.
இச்சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்று கூறியுள்ளார்.
வாழ்வையே அர்ப்பணித்தவர்கள்:
இது தொடர்பாக அவர் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.”என்று கூறியுள்ளார்.






















