Watch Video | ”தன் கொம்பே தனக்குதவி” : கொம்பால் அடி பைப் அடித்து தண்ணீர் குடிக்கும் கெத்து எருமை..
தாகத்தால் தவித்த எருமை மாடு ஒன்று அடிகுழாயை தன் கொம்பால் அடித்து தண்ணீரைக் குடித்துள்ளது.
தாகத்தால் தவிக்கும் காகம் ஒரு பானையில் கற்களை போட்டு தண்ணீர் குடித்தது என கதையைக் கேள்விபட்டிருப்போம். அதேபோல தாகத்தால் தவித்த எருமை மாடு ஒன்று அடிகுழாயை தன் கொம்பால் அடித்து தண்ணீரைக் குடித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷா ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் தான் இந்த அறிவாளி எருமை வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு எருமைக் கூட்டம் நிற்கிறது. அதில் ஒரு எருமை தாகத்தால் தவித்து அருகேயுள்ள அடி குழாய் அருகே வருகிறது. தன் கொம்பால் பைப்பை அடித்து வழிந்தோடும் தண்ணீரைக் குடிக்கிறது.
अब बताओ - "अक्ल बड़ी या भैंस"? 😅 pic.twitter.com/ee4bipnEGZ
— Dipanshu Kabra (@ipskabra) November 19, 2021
இதனை மூளைக்கு மேல் மூளை என குறிப்பிட்டு ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து எருமையின் அறிவை வியந்து வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஒருவர் இனி அறிவில்லையா எருமை என யாரையும் யாரும் திட்டக்கூடாது என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
अब बताओ - "अक्ल बड़ी या भैंस"? 😅 pic.twitter.com/ee4bipnEGZ
— Dipanshu Kabra (@ipskabra) November 19, 2021
Can't comment on that Sir. But it seems to be a perfect example of Aatma Nirbharta, self dependence.
— Enviro Annotations (Weekly Newspaper) (@enviannotations) November 20, 2021
भैंस की अक्ल..😄
— Surender Mehra IFS (@surenmehra) November 19, 2021
சமீபத்தில் யானைக் குட்டி ஒன்று அடிபைப்பில் தண்ணீரை அடித்து குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்