மேலும் அறிய

Karnataka High Court: பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் வழங்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி என்ன?

பெண் என்பதை ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாகக் கருத முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் வழங்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றம், பெண் என்பதை ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாகக் கருத முடியாது என்று கூறியுள்ளது. வேறு ஒரு நபருடன் இருக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பை கேள்வி எழுப்பிய கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி டில்லி ராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியின் மனுவை விசாரித்த நீதிபதி முகமது நவாஸ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.

நடந்தது என்ன? 

சங்கர் ரெட்டி பெங்களூருவில் பணிபுரிந்து வந்தார், அவரது குடும்பத்தினர் ஆந்திராவில் வசித்து வந்தனர். இவர் தனது குழந்தைகளின் கல்விக்காக தனது குடும்பத்தை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டில்லி ரானியின் உறவுக்கு தடையாக இருந்த சங்கர் ரெட்டியை இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 24, 2022 அன்று, டில்லி ராணியும் அவர்களது இரண்டு மைனர் குழந்தைகளும் வசித்த வீட்டில் அவரது கணவர் சங்கர் ரெட்டி கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சங்கர் ரெட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்து, பின்னர் அதை ஆதாயத்திற்கான கொலை என்று காட்ட முயற்சித்தார். கொலை வழக்கு பதிவு செய்த யஷ்வந்த்பூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு, டில்லி ராணி மற்றும் அவரது காதலரை கைது செய்தனர்.  

மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களில் அடிப்படையில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியுடன் மனைவிக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவத்திற்குப் பிறகு டில்லி ராணி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு, விசாரணையைத் தவறாக வழிநடத்த தனது நகைகளை மறைத்து வைத்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் காதணிகள், மாங்கல்ய செயின் மற்றும் ராணியின் உடைகளை  போலீசார் மீட்டுள்ளனர். இதனை நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.  கண்விழித்து பார்த்தபோது, ​​தனது தந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதைப் பார்த்ததாக சங்கர் ரெட்டியின் மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.  

வழக்கின் பின்னணி:

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. டில்லி ராணி மற்றும் கணவர் சங்கர் ரெட்டி திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் பெண் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கறிஞர் வாதத்தை அந்த அமர்வு தள்ளி வைத்தது. ராணி செப்டம்பர் 24, 2022 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். தனது ஜாமீன் மனுவை நிராகரித்த 63வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்ததால், குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியை நிரபராதி என்று கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget