Watch Video: தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென மயங்கி விழுந்த முதல்வர் மகள்! என்ன ஆச்சு அவருக்கு? தொற்றிக்கொண்ட பரபரப்பு
தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்கான முதல்வர் கேசிஆரின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Watch Video: தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்கான முதல்வர் கேசிஆரின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடுபிடித்த தேர்தல் களம்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு, புது மாநிலமாக உருவான தெலங்கானாவில் கடந்த 9 ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கவனம் செலுத்தி வரும் பாஜக, தெலங்கானாவில் கணிசமான அளவில் வெற்றியை ஈட்ட முயற்சித்து வருகிறது. அதேபோல, இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரத்தில் நிலைகுலைந்த முதல்வர் மகள்
#WATCH | BRS MLC K Kavitha fell unconscious during a road show at Itikyal in Telangana
— ANI (@ANI) November 18, 2023
More details awaited.
(Source: BRS) pic.twitter.com/VRIBlvALF2
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகளும், அம்மாநில எம்.எல்.சியுமான கவிதா இன்று தேர்த்ல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் உள்ள இட்டிக்யால் என்ற இடத்தில் கே.சி.ஆரின் மகள் கவிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் . காரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர், திடீரென மயக்க மடைந்து கீழே விழுந்திருக்கிறார். உடனே, கட்சி நிர்வாகிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்திருக்கின்றனர். நீர்சத்து குறைபாடு காரணமாக கவிதா மயக்க மடைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். கவிதா உடல்நிலை சரியானதை அடுத்து, சிறிது நேரத்திற்கு பிறகு பிரச்சாரம் தொடங்கியது.
இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெலங்கான எம்.எல்.சி கவிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”மன்னிக்கவும்..நான் சிறிது நேரத்தில் பயந்துவிட்டேன். நான் தற்போது நன்றாக இருக்கிறேன். நான் இப்போது கொஞ்சம் உற்சாகமாக உணர்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க
TN Assembly LIVE: ஆளுநருக்கு எதிரான தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..