மேலும் அறிய
Advertisement
TN Headlines: கோலாகலமாக நடந்த விஜய்யின் மாநாடு! த.வெ.க. கொள்கைகள், திட்டங்கள் அறிவிப்பு!
TN Headlines: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக உடனுக்குடன் காணலாம்.
- விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு
- விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கொடி குறித்து விளக்கம் அளித்தார் விஜய்
- பிளவு வாத அரசியல், ஊழல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிரி என பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை குறிப்பிட்டார் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் – நடிகர் விஜய்
- சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சமூக நீதி பாதையில் பயணிப்போம் – விஜய்
- பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடு இல்லை – தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
- தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இருக்க விரும்பவில்லை – விஜய்
- குடும்ப அரசியல் செய்யும் திராவிட மாடல் அரசு அண்ணா, பெரியார் பெயரில் மக்களை சுரண்டுகிறது – விக்கிரவாண்டியில் விஜய் பரபரப்பு பேச்சு
- தமிழக வெற்றிக் கழகம் நாகரீகமான அரசியலை செய்யும், அதேசமயம் ஆழமான அரசியல் செய்யும் – விஜய் திட்டவட்டம்
- தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வளர்ந்ததே சினிமாவால்தான் ஆகும் – விஜய் பேச்சு
- மதுவை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றி பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும் – தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
- மாநில சுயாட்சி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அறிவித்தார் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை இரு மொழிக் கொள்கை; தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இருக்கும்
- விஜய் தனது நீண்ட கால நண்பர் என்றும், அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து
- யார் அரசியலுக்கு வந்தாலும் தி.மு.க.வைத்தான் எதிர்பார்ப்பார்கள் – ஆர்.எஸ்.பாரதி
- விஜய்யின் பேச்சு இரண்டரை மணி நேரம் திரைப்படம் பார்ப்பது போல இருந்தது- முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion