Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
![Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/03/3cc54e668e174e6c0604cea1c7c20409_original.jpg)
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 24,405 ஆக உள்ளது. 32,221 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,80,426 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 28,186 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா கொரோனா நிலவரம்
கேரள மாநிலம் 16,229 புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 135 பேர் இறந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை சிகிச்சை பெற்றுவருபவர்கள் மொத்தம் 1,74,526.
கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு : எழும் கண்டனக் குரல்கள்
இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயலுக்கு ராமதாஸ், சு.வெங்கடேசன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து கைதிகளுக்கும் விரைவில் தடுப்பூசி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகளை மாநில அரசு மேறகொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)