Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 483 பேர் உயிரிழப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 26,513 ஆக குறைந்தது. 31,673 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 18 முதல் 44 வயதுடைய 13 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை முதல் டோஸாக செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸாகவும் அதே மருந்தைத் தான் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மருந்தை மாற்றக் கூடாது எனவும், நித்தி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 483 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 483 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது - உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



















