மேலும் அறிய

TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது

இன்றைய கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது

Background

நாடு முழுவதும் முதன்முறையாக நேற்று ஒரே நாளில்  நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையைத் தொடங்கியுள்ளது. 

இருப்பினும், தினசரி கொரோனா ஏற்படும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகைர்த்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில சுயாட்சி முழக்கமும்; திமுக அமைச்சர்களின் கருத்தும்!

தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம், கூட்டாண்மை அடிப்படையில் ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.   

திமுக அரசின் செயல்பாடு; மாநில சுயாட்சியா ? மத்திய அரசு எதிர்ப்பா ?

20:29 PM (IST)  •  19 May 2021

மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்

  • கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது. 
  • அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. 
  • முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். 
  • வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது. 

 

18:50 PM (IST)  •  19 May 2021

யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?

18:09 PM (IST)  •  19 May 2021

மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன

18:06 PM (IST)  •  19 May 2021

குணமானவர்களுக்கு மூன்று மாதத்துக்கு பிறகு தடுப்பூசி

கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

13:34 PM (IST)  •  19 May 2021

எஃகு ஆலைகள் 4,000  மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

நாட்டில் எஃகு ஆலைகள் தினமும் 4,000  மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருவதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12:48 PM (IST)  •  19 May 2021

சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்

சென்னையில் தர்போது 48,455 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.     

12:29 PM (IST)  •  19 May 2021

ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு

தமிழகத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர். 

 

 

12:28 PM (IST)  •  19 May 2021

4530 பேர் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4530 பேர் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1291 கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 

 

    

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன? 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகளுடன்,  முந்தைய வாரங்களில் விடுபட்ட 612 கொரோனா இறப்புகளை அம்மாநில அரசு இணைத்துள்ளது. இதன், காரணாமாக அங்கு கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

 

11:53 AM (IST)  •  19 May 2021

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.23 சதவீதமாக உள்ளது

கடந்த 6 நாட்களாக, நாடு முழுவதும் புதிய பாதிப்புகளை விட கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

]கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர். நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 21986363 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.23 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3226719 ஆக இன்று குறைந்துள்ளது . இது நாட்டின் மொத்த பாதிப்பில் 12.66% ஆகும்.

 

11:36 AM (IST)  •  19 May 2021

காவல் துறையினரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோவிட் கால பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார் 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Taiwan Earthquake: ஒரே இரவில் 80க்கும் மேல் நிலநடுக்கங்கள்... அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளால் குலுங்கும் தைவான்!
ஒரே இரவில் 80க்கும் மேல் நிலநடுக்கங்கள்... அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளால் குலுங்கும் தைவான்!
Lord Kallazhagar: ”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
Breaking Tamil LIVE : அரசு ஊழியர்களுக்கு  உதவித்தொகைகளை அதிகரித்து அரசாணை வெளியீடு..!
அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகைகளை அதிகரித்து அரசாணை வெளியீடு..!
Soori:   “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது இந்தியாவுக்கே பெருமை” -  நெகிழ்ந்த சூரி!
“கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது இந்தியாவுக்கே பெருமை” - நெகிழ்ந்த சூரி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal insulin : நியூஸ் பேப்பரில் வந்த செய்தி! ஷாக்கான கெஜ்ரிவால்! போராட்டத்தில் ஆம் ஆத்மிManickam Tagore : ”மத வன்மத்தை பரப்பும் மோடி!ஓய்வு எடுக்குற நேரம் வந்தாச்சு”விளாசும் மாணிக்கம் தாகூர்Lok Sabha Elections 2024 : முதல் வெற்றி! சூரத்-ஐ கைப்பற்றிய பாஜக! கொந்தளிக்கும் காங்கிரஸ்Madurai Chithirai thiruvila : சித்திரை திருவிழாவில் இஸ்லாமியர் நெகிழ்ச்சி சம்பவம்! ”இதான் தமிழ்நாடு”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Taiwan Earthquake: ஒரே இரவில் 80க்கும் மேல் நிலநடுக்கங்கள்... அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளால் குலுங்கும் தைவான்!
ஒரே இரவில் 80க்கும் மேல் நிலநடுக்கங்கள்... அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளால் குலுங்கும் தைவான்!
Lord Kallazhagar: ”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
Breaking Tamil LIVE : அரசு ஊழியர்களுக்கு  உதவித்தொகைகளை அதிகரித்து அரசாணை வெளியீடு..!
அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகைகளை அதிகரித்து அரசாணை வெளியீடு..!
Soori:   “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது இந்தியாவுக்கே பெருமை” -  நெகிழ்ந்த சூரி!
“கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது இந்தியாவுக்கே பெருமை” - நெகிழ்ந்த சூரி!
CSK vs LSG: லக்னோ மீது சொந்த மண்ணில் தாக்குதல் நடத்துமா சென்னை? இன்று இரு அணிகளும் மோதல்..!
லக்னோ மீது சொந்த மண்ணில் தாக்குதல் நடத்துமா சென்னை..? இன்று இரு அணிகளும் மோதல்..!
Global Military Expendture: போர் பதற்றம் - பல லட்சம் கோடிகளை ராணுவத்திற்காக செலவிடும் உலக நாடுகள் லிஸ்ட்! இந்தியா நிலை?
Global Military Expendture: போர் பதற்றம் - பல லட்சம் கோடிகளை ராணுவத்திற்காக செலவிடும் உலக நாடுகள் லிஸ்ட்! இந்தியா நிலை?
Chithirai Thiruvizha: கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
IPL 2024 Points Table: ராஜஸ்தான் முதலிடம்.. அப்போ! சென்னைக்கு எந்த இடம்..? புள்ளிப்பட்டியல் விவரம் இதோ!
ராஜஸ்தான் முதலிடம்.. அப்போ! சென்னைக்கு எந்த இடம்..? புள்ளிப்பட்டியல் விவரம் இதோ!
Embed widget