மேலும் அறிய

Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியவதற்கு, எதிர்ப்புகளை இந்தியா அழுத்தமாகவும்,  வெளிப்படையாகவும் தெரிவித்திருக்க வேண்டும்- நிருப்பம மேனன் ராவ்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட நகரங்களை தாலிபான் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் முக்கிய நகரங்களான காந்தகார், ஹெராத் தாலிபான் படைகளால் கைப்பற்றப்பட்டது. 

செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் இருத்தலை அமெரிக்காவால் நீக்க முடியவில்லை.  

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசு பிரதிநிதிகளுக்கும் – தாலிபான் அமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் அமெரிக்கா மேற்கொண்டது. இதில், உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.          

அடுத்த சில வாரங்களில், அமெரிக்கப் படை வெளியேறுவதற்கு முன்பே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் வன்முறை சம்பவங்களை மேற்கொண்டன. 

Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

தாலிபானின் வன்முறை சமபவங்களுக்கு நடுவில் தான் அமெரிக்கப் படைகள் வெளியேறின. கடந்த, மே மாதத் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில்  பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. தற்போது, நாட்டின் 220க்கும் அதிகமான மாவட்டங்கள் தற்போது தாலிபான் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன.   

நாட்டின் 15 மாகாணாங்களின் தலைநகரங்கள் தற்போது தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹெராத், சர்-இ-புல், குண்டூஸ், ஷேபர்கான், நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் ஸ்ராஞ், கந்தஹார், ஹெராத் உள்ளிட்ட முக்கிய தலைநகரங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. 

இந்த ஆக்கிரமிப்பின் உச்சகட்ட சம்பவமாக, இரு தினங்களுக்கு முன்பாக குண்டூஸ் மாகாணத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்தை தாலிபான் கைப்பற்றியது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், துப்பாக்கி கருவியை தாலிபான் படைகளிடம் ஒப்படைத்து சரணடையும் வீடியோ சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது.  

ஆப்கானிஸ்தானில் ராணுவக் கட்டமைப்பு ஏன் சரிந்தது? 

 அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியின் அடையாளமாக ஆப்கானிஸ்தான் உள்ளது. 20 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய  பாதுகாப்புப் படையை உருவாக்க அமெரிக்கா முனைந்தது. முழுமையான எல்லைப் பாதுகாப்புப் படையை உருவாக்கப்பட்டு நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கவும், அதன் மூலம் மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்பதே      பராக் ஒபாமாவின் முக்கியத் திட்டமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும் சரிவை ஏற்படுத்தின. 

மேலும், ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல் போக்குகளும் அதன் ராணுவக் கட்டமைப்பை பலவீனமாக்கின. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையில் 3 லட்சம் வீரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இதில் 6ல் 1 பங்கு எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் கூட அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், நவீன தொழில்நுட்ப கட்டமைப்புக்கு முக்கியத்துவம்  கொடுத்த அளவுக்கு மனித வளங்களுக்கு முக்கியத்தும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

இந்தியாவின் உத்தி என்ன? : ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் உத்தி என்ன? என்று முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிருபமா மேனன் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் உத்தி என்ன?  ராவல்பிண்டியால் தூண்டப்பட்ட தாலிபான் படையினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தினால் அதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்துளோம் என்று நம்புகிறேன். அது போல, இரண்டு விரோதமான அண்டை நாடுகளால் நமது நிலைமை மிகவும் மோசமடையும்.

கார் விபத்து நடக்கும்போது நாம் அமைதியான முறையில் வேடிக்கைப் பார்ப்போமா? நாம் மிகப் பெரிய நாடு.  தன்னாட்சி பொருந்திய நமது வெளியுறவுக் கொள்கையில்  பெருமைப்படுகிறோம். தலைவர்களை பின்பற்றும் சிறிய மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியா இருப்பதில்லை.  

இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் நேரங்களில், இந்தியா நிச்சயம் பின்வாங்கக் கூடாது. அங்கு, நமது  துணைத் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.  

மேலும், தலிபான்களுக்கு ஒரு துக்கமான வேண்டுகோளாக நாம் பார்க்கும் எதிர்ப்பின் மூலோபாயத்தை உருவாக்குவதில் அதிக ஆற்றல் மிக்கவராக இருந்தார். ஆனால் நாங்கள் பேருந்தில் ஏறினோம் - சக்கரங்கள் இல்லாத பேருந்து. வரலாறு நம்மை எப்படித் தீர்மானிக்கும்? 

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியவதற்கு, எதிர்ப்புகளை இந்தியா அழுத்தமாகவும்,  வெளிப்படையாகவும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சக்கரம் இல்லாத வண்டியில், இந்தியா பயணம் செய்ய தயாராகி கொண்டு வருகிறோம். வரலாறு எப்படி நம்மை பார்க்கும்? இறுதியில் வென்றது பாகிஸ்தான் தான் " என்று தனது ட்விட்டரில் தெரிவித்தார்.         

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget