மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

சடங்குகள் செய்யவில்லை என்றால் இந்து முறை திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Hindu Marriage: சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றினால் மட்டுமே இந்து திருமணம் செல்லும். அப்படி செய்யவில்லை என்றால், அது இந்து திருமணமாக கருதப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Hindu Marriage: இந்து திருமண சட்டம், 1955இன்படி சட்டப்பூர்வமாக பின்பற்ற வேண்டிய தேவைகள் மற்றும் பேணி பாதுகாக்க வேண்டிய புனித தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இந்து திருமணம் குறித்து நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணையின்போது, தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்து மனு தாக்கல் செய்ய ஒப்பு கொண்டனர்.

தங்களின் திருமணத்தில் முறையான பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எதுவும் பின்பற்றவில்லை. ஆனால், தேவை ஏற்பட்டதாலும் நெருக்கடி காரணமாகவும் பதிவு செய்யப்பட்ட வேத பொது நலக் குழுவிடம் திருமணம் நடந்ததாக சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த சான்றிதழின் அடிப்படையில், உத்தரப் பிரதேச பதிவு விதி, 2017 இன் கீழ், திருமண பதிவு சான்றிதழை பெற முயன்றோம். இறுதியில், திருமணப் பதிவாளரால் திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது என கணவன், மனைவி சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

"சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும்"

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு, "புனிதமான ஹோம குண்டத்தை சுற்றி ஏழு முறை வலம் வருவது உள்பட முறையான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றினால் மட்டுமே இந்து திருமணம் செல்லும்.

அப்படி செய்யவில்லை என்றால், அது இந்து திருமணமாக கருதப்படாது. சச்சரவுகள் ஏற்படும்போது இந்த சடங்குகள் நடந்ததற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் இந்து திருமணத்தை பதிவு செய்வது, திருமணத்திற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.

இந்து திருமண சட்டம், பிரிவு 7இன்படி, திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்றால் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படாது. முறையான சடங்குகளுடன் இந்து திருமணம் நடைபெறவில்லை என்றால் சட்டத்தின் 8வது பிரிவின் விதிகளின் கீழ் திருமணப் பதிவு அதிகாரி அத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

எனவே, தம்பதியினர் திருமணம் செய்து கொண்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டாலும் கூட, சட்டத்தின் 7-வது பிரிவின்படி திருமண விழா நடைபெறவில்லை என்றால், அத்தகைய திருமணத்தை பிரிவு 8-ன் கீழ் பதிவு செய்வது அத்தகைய திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரமும் அளிக்கப்படாது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, திருமணப் பதிவாளரிடம் திருமணத்தைப் பதிவுசெய்து, அதன்பிறகு வழங்கப்படும் சான்றிதழானது, இருதரப்பினரும் இந்து திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தாது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6,  நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6, நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
TN Weather Update: வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!PM Modi vs I.N.D.I.A Alliance : மோடிக்கு எதிராக ஸ்கெட்ச்..ராகுல் எடுத்த முக்கிய முடிவு!Edappadi Palanisamy : ’’நான் தான் கிங்’’எகிறி அடித்த எடப்பாடி சறுக்கிய அ.மலை!Edappadi Palanisami : பத்து முறை தோல்வி! வெற்றிக்கு திண்டாடும் EPS தத்தளிக்கும் அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6,  நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6, நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
TN Weather Update: வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
BJP Fall In UP: உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்றது எப்படி? கைவிட்ட ராமர், சறுக்கிய புல்டோசர் பாபா, மாயாவதி எங்கே?
BJP Fall In UP: உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்றது எப்படி? கைவிட்ட ராமர், சறுக்கிய புல்டோசர் பாபா, மாயாவதி எங்கே?
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Crime: உல்லாசத்துக்கு ஒத்துழைக்க மறுத்த மனைவி.. மதுபோதையில் கணவன் செய்த வெறிச்செயல்..
Crime: உல்லாசத்துக்கு ஒத்துழைக்க மறுத்த மனைவி.. மதுபோதையில் கணவன் செய்த வெறிச்செயல்..
Shah Rukh Khan : ”உன் காதலனாக நடிக்க வேண்டும்” - ஷாருக் கானின் ஆசைக்கு சானியா மிர்சா சொன்ன பதில் என்ன தெரியுமா?
Shah Rukh Khan : ”உன் காதலனாக நடிக்க வேண்டும்” - ஷாருக் கானின் ஆசைக்கு சானியா மிர்சா சொன்ன பதில் என்ன தெரியுமா?
Embed widget