Freebies Case Supreme Court:இலவச வாக்குறுதிகள் குறித்த வழக்கு- மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Freebies Case Supreme Court: இலவச வாக்குறுதிகள் குறித்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி. ரமணா உத்தரவிட்டுள்ளார்.

இலவச வாக்குறுதிகள் குறித்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி. ரமணா உத்தரவிட்டுள்ளார்.
#BREAKING Supreme Court refers freebies matter to a 3-judge bench.#SupremeCourt #Freebies
— Live Law (@LiveLawIndia) August 26, 2022
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நேரடியாக விசாரித்த தலைமை நீதிபதி, இந்தப் பிரச்சினையை தீர்க்க மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஆராய நீதிபதிகள் என்.வி. ரமணா, யூ. யூ. லலித் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற அலவல் நேரலை:
நேரலை ஒளிபரப்ப அனுமதி
செப்டம்பர் 26, 2018 அன்று, உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் குற்றங்கள் மற்றும் திருமண தகராறுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப் படாமல் இருந்தது. கர்நாடகா, குஜராத், ஒடிசா போன்ற நாட்டின் பல உயர் நீதிமன்றங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்புகின்றன.
https://webcast.gov.in/events/MTc5Mg--
ABP Nadu யூடியூபில் லைவ் காண..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

