Sonali Phogat: கோவாவில் தங்கியிருந்தபோது மாரடைப்பு! பிக்பாஸ் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி உயிரிழப்பு!
டிக் டாக் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி பஹாத் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
![Sonali Phogat: கோவாவில் தங்கியிருந்தபோது மாரடைப்பு! பிக்பாஸ் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி உயிரிழப்பு! Sonali Phogat BJP Leader and Bigg Boss 14 Participant, Dies of Heart Attack in Goa Sonali Phogat: கோவாவில் தங்கியிருந்தபோது மாரடைப்பு! பிக்பாஸ் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி உயிரிழப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/fe37e43e7a3100972cd124996b031ffb1661232641523175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
41வயதான சோனாலி பஹாத் தன்னுடைய உதவியாளர்களுடன் கோவாவில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய உதவியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக சோனாலி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
View this post on Instagram
சோனாலி ஹரியானாவைச் சேர்ந்தவர். அவர் உயிரிழந்த தகவல் கேட்டு அவரது பெற்றோர் கோவா விரைந்துள்ளனர். 2016ம் ஆண்டு சோனாலியின் கணவர் சஞ்சய் பண்ணைவீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். டிக் டாக் பிரபலம், பிக்பாஸ் பிரபலம் என பல்வேறு முகங்களை கொண்ட சோனாலி பின்னர் பாஜகவில் இனைந்து ஹரியானா சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்டார்.
இறப்பதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பே அவர் இன்ஸ்டாவில் வீடியோஒன்றை பகிர்ந்துள்ளார். அதேபோல் ட்விட்டரில் புகைப்படத்தையும் அவர் மாற்றியுள்ளார். சோனாலியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)