மேலும் அறிய

புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே... விடுதியில் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்...

கோவா விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள், இச்செய்தியினை அங்கு வைக்கப்பட்ட பெரிய திரையில் கண்டதும் நடனமாட தொடங்கினர். சிலர் மேஜைகளில் கூட ஏறி கூட டான்ஸ் செய்தனர். 

மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குத்தாட்டம் போட்டனர். 

மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இதை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகாராஷ்ட்ர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட்டதால், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட உத்தவ்தாக்கரே மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, நேற்று இரவு முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்தார். மகாராஷ்ட்ராவில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்த சூழலில், இன்று மாலையில் ஆளுநர் பகத்சிங் கேஷ்யாரியை ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேவேந்திர பட்னாவிஸ், “ உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் பால்தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 2019ல் பா.ஜ.க. ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறும். அமைச்சரவையில் நான் இடம்பெறமாட்டேன்.” எனத் தெரிவித்தார். 

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்காதது பா.ஜ.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெற இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு ஏற்பது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோவா விடுதியில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள், இச்செய்தியினை அங்கு வைக்கப்பட்ட பெரிய திரையில் கண்டதும் நடனமாட தொடங்கினர். சிலர் மேஜைகளில் ஏறி டான்ஸ் செய்தனர். 

இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget