மேலும் அறிய

Sabarimala: பங்குனி உத்திரம்; சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு..! யாருக்கெல்லாம் அனுமதி?

Sabarimala Temple:பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Sabarimala Temple:பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.

நடைதிறப்பு:

இதுதொடர்பான தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். அன்றிலிருந்து 10 நாட்களுக்கு ஏப்ரல் 5-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5ஆம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலையே கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா முடிவடைகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகள்: 

தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். 

இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது என்று தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

Tirupati Ticket Bookings: திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..! நாளை மறுநாள் முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - பக்தர்களே படிங்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
Embed widget