மேலும் அறிய

சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை பக்தர்களின் நலன் கருதி, மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் டிஜிட்டல் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.


சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..

பிற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027 ஜனவரி மாதம் 14-ந் தேதியும் நடைபெறுகிறது. நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற பெயரில் புதிய இணையதள செயலி (போர்ட்டல்) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..

இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நிசாமுதீன் கூறியதாவது, ஐயப்ப் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதள செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் செல்போன், கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் விதத்தில் 'கியூ ஆர்' கோடுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 'வாட்ஸ் அப் சார்ட் போர்ட்' போன்றவையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன் இந்த செயலி மூலம் பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை புகார்களாக தெரிவிக்கலாம். குறிப்பாக காணாமல் போனவர்கள் விவரங்கள், தவறவிட்ட பொருட்கள் குறித்த விவரங்களை இந்த செயலியில் புகாராக பதிவு செய்யும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த செயலியில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அத்துடன் வாகன நிறுத்தம், ரயில், பேருந்து போக்குவரத்து குறித்த தகவல்களும் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம் என இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
இனி PF பணம் எடுக்க அலைய வேண்டாம்! UPI, ATM மூலம் பணம் எடுக்கும் வசதி – எப்போது அமல்?
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களே கவனம்! 12 கி.மீ பாரம்பரிய காட்டு வழி திறப்பு – முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
Embed widget