மேலும் அறிய

RTO Services Online: ஆர்டிஒ ஆன்லைன் சேவைகள் அதிகரிப்பு… மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த இதோ புதிய மாற்றங்கள்!

வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் முயற்சியில், வர்த்தகச் சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் புதிய விதிகளை MORTH அறிவித்துள்ளது

ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்லைனில் செய்யக்கூடிய குடிமக்களை மையமாகக் கொண்ட 18 சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை MoRTH வெளியிட்டுள்ளது, இதன்மூலம் RTO விற்கு செல்லவேண்டிய வேண்டிய தேவைகளை மேலும் நீக்குகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

MORTH அறிக்கை

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் கீழ் 14 செப்டம்பர் 2022 தேதியிட்ட GSR 703(E) இன் படி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) வர்த்தகச் சான்றிதழில் விரிவான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகளில் உள்ள சில முரண்பாடுகள் காரணமாக, வர்த்தகச் சான்றிதழின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து பல சந்தர்ப்பங்களில் விளக்கம் தேவைப்பட்டது. இது பல வணிக நிறுவனங்களை பாதித்தது. மேலும், வர்த்தகச் சான்றிதழுக்கான விண்ணப்பம் ஆர்டிஓவிற்கு சென்று நேரடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதனால் ஆர்டிஒ வில் நிறைய நேரத்தை வீண் செய்யும் நிலை இருந்தது. வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் முயற்சியில், வர்த்தகச் சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் புதிய விதிகளை MORTH அறிவித்துள்ளது" என்று எழுதியுள்ளனர்.

RTO Services Online: ஆர்டிஒ ஆன்லைன் சேவைகள் அதிகரிப்பு… மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த இதோ புதிய மாற்றங்கள்!

புதிய விதிகள் பின்வருமாறு:

  1. பதிவு செய்யப்படாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தகச் சான்றிதழ் தேவைப்படும். அத்தகைய வாகனங்கள் மோட்டார் வாகனங்களின் டீலர்/உற்பத்தியாளர்/இறக்குமதி செய்பவர் அல்லது விதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை நிறுவனத்திடம் மட்டுமே இருக்க முடியும்.
  2. வர்த்தகச் சான்றிதழ் மற்றும் வர்த்தகப் பதிவு மதிப்பெண்களுக்கான விண்ணப்பத்தை ஆர்டிஓவைச் சந்திக்காமல் வாகன் போர்ட்டலில் மின்னணு முறையில் பெறலாம். மேலும், விண்ணப்பதாரர் ஒரே விண்ணப்பத்தில் பல வகையான வாகனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  3. வர்த்தகச் சான்றிதழை வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

தொடர்புடைய செய்திகள்: பரவும் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்..

  1. வர்த்தகச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் 12 மாதங்களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  2. டீலர்ஷிப் அங்கீகார சான்றிதழ் (படிவம் 16A) டீலர்ஷிப் அங்கீகாரம் முழுவதும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகச் சான்றிதழ் டீலர்ஷிப் அங்கீகாரத்துடன் கோ-டெர்மினஸாக மாற்றப்பட்டுள்ளது.
  3. ஷோரூம்கள்/கோடவுன்களில் டீலர்ஷிப் அங்கீகார சான்றிதழையும் காட்சிப்படுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டது.
  4. வரும் நவம்பர் 1 முதல் இந்த நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள வர்த்தகச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படும் வரை செல்லுபடியாகும்.

RTO Services Online: ஆர்டிஒ ஆன்லைன் சேவைகள் அதிகரிப்பு… மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த இதோ புதிய மாற்றங்கள்!

குடிமக்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் திட்டம்

என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சேவைகளை தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தின் உதவியுடன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்டிஒ தொடர்பு இல்லாமல், நேரடியாக சந்திக்க தேவையில்லாத இத்தகைய சேவைகளை வழங்குவது குடிமக்களின் நேரத்தை மிகவும் சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஒ-வில் உள்ள கடும் கூட்டம் காரணமாக, சில சிறிய வேலையை செய்யக்கூட ஒரு நாள், இரண்டு நாள் கூட நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலை இருந்தது. இதனை சரிசெய்யவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Embed widget