மேலும் அறிய

Dinosaur Egg: ஒன்றல்ல.. இரண்டல்ல.. மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு - ஆய்வில் புதிய திருப்பம்

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்ததாக கருதப்படும் டைனோசர் இனத்தின் 256 முட்டைகளை மத்திய பிரதேசத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

Madhya Pradesh : மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

டைனோசர்

டைனோசர் என்றாலே நாம் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் ஏற்படும். பிரமாண்டமான இந்த டைனோசர்கள் பற்றி நிறைய கதைகளும், திரைப்படங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக நாம் அனைவரையும் ஆச்சிரயத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் வந்தது.  1997-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'ஜூராசிக் பார்க்' திரைப்படம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அந்தப் படம், டைனோசரை நம் கண்முன் கொண்டு வந்து நிற்பது போல் இருக்கும். இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது-

ஆனால் நாம் திரைப்படத்தில் பார்ப்பது போன்று உண்மையான டைனோசர்கள் இருக்காது. திரைப்படத்தில் பார்க்கும் டைனோசர்களுக்கு உண்மையான டைனோசர்களுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  டைனோசர்களில் 40 வகையான டைனோசர்கள் இருக்கின்றன. அதாவது தாவர உண்ணி, ஊன் உண்ணி உள்ளட்ட அமைப்புகளின் இருக்கின்றன. டைனோசர்களின் உடல் அமைப்பை தெரிந்து கொள்ளும் வகையில் சில எலும்புகள் கிடைத்துள்ளன. இருந்தாலும் ஒரு சில வகையான டைனேசர்களின் உடல் அமைப்பை தெரிந்து கொள்ளும் வகையில் இதுவரை எந்த எலும்புகளும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


Dinosaur Egg: ஒன்றல்ல.. இரண்டல்ல.. மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு - ஆய்வில் புதிய திருப்பம்

டைனோசர் 7 மீட்டர் நீளமும் சுமாராக 10 ஆயிரம் கிலோ எடையும் கொண்டதாகும். ஆனால் இந்த இனத்தின் முழு எலும்புக்கூடும் தற்போது வரை கிடைக்கவில்லை என்பதால் இதனை அங்கீகரிப்பட்ட ஒரு இனமாக கருத முடியாது என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் மத்திய பிரசேத மாநிலம் நர்மதை பள்ளத்தாக்கு பகுதியில் டைனோசர் கூடுகள் மற்றும் 256 முட்டைகள் கண்டுடெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைனோசர் கூடுகள், முட்டைகள்

டெல்லி பல்கலைக்கழகம், மோகன்பூர்-கொல்கத்தா மற்றும் போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இதனை கண்டுபிடித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தின் நர்மதை பள்ளத்தாக்கில் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குக்ஷி பகுதிகளில் 256 புதைப்படிவ முட்டைகளையும், கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவை அளவில் மிகப்பெரியவை. இது குறித்த ஆய்வுத்தகவல்கள் பிளாஸ் ஒன் என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த டைனோசர் முட்டைகள் மற்றும் கூடுகள் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில்  நீண்ட கழுத்துக் கொண்ட டைனோசர்களின் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நர்மதை பள்ளத்தாக்கு:

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் கூறியதாவது, ”டெதிஸ் கடல், நர்மதையுடன் இணைந்த இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நர்மதை பள்ளத்தாக்கில் காணப்படும் கூடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்த கூடுகள். பொதுவாக ஒன்றுக்கொன்று சிறிது தூரத்தில் அமைந்திருக்கும். நர்மதை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் 15 செ.மீ. முதல் 17 செ.மீ. வரையிலான விட்டம் கொண்டவை. ஒவ்வொரு கூட்டிலும் 1 முதல் 20 முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, "2017-ம் ஆண்டுக்கும், 2020-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின்போது தார் மாவட்டத்தில் பாக் மற்றும் குஷி பகுதிகளில் குறிப்பாக அகாடா, தோலியாராய் புரியா, ஜாபா, ஜாம்னியாபுரம், பாட்லியா கிராமங்களில் டைனோசர்கள் குஞ்சு பொரிப்பது பற்றி விரிவாக கண்டறிந்தோம்" என்றார்.

 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget