மேலும் அறிய

Ramadoss: ராஜஸ்தானை போல தமிழ்நாட்டிலும் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

நிர்வாக வசதிகளுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.

நிர்வாக வசதிகளுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.

ராஜஸ்தான் தேர்தல்:

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே அங்கு நேரடிப்போட்டி நிலவி வருவதால், இப்போதே அங்கு தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தலைமையமாக கொண்டு பல்வேறு அதிரடி திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

ஒரே நாளில் 17 மாவட்டங்கள்:

அதன் ஒரு பகுதியாக தான் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போதுள்ள மாவட்டங்களை பிரித்து, புதியதாக 17 மாவட்டங்களை ராஜஸ்தான் அரசு உருவாக்கியுள்ளது. அந்த மாவட்டங்களுகான அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை முதலமைச்சர் அஷோக் கெலாட் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், ராஜஸ்தானில் இருந்த 33 மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உத்தரப்பிரதேசம் (75), மத்தியப் பிரதேசம் (52) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, நாட்டிலேயே அதிக மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது மாநிலமாக  ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது. 

ராமதாஸ் கோரிக்கை:

ராஜஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கையை குறிப்பிட்டு, தமிழக அரசும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் “சிறியவையே அழகு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக்க வேண்டும்; அது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  12 லட்சம் பேருக்கு  ஒரு  மாவட்டம் வீதம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது தான்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதை  செயல்படுத்த தமிழக அரசு தாமதித்து வரும் நிலையில்,  ராஜஸ்தான் அரசு முந்திக் கொண்டது. புதிய மாவட்டங்கள்  உருவாக்கப்பட்ட பிறகு  ராஜஸ்தான் மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 13 லட்சம். ஆனால், தமிழக மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 19 லட்சமாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25. மாவட்டங்களின் எண்ணிக்கை 50. அதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில்  3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா என மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைத்த மாநிலங்கள் அனைத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடும் அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு மாவட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Embed widget