மேலும் அறிய

Railway India : பயணிகளே! அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்கள் - மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

3 ஆயிரம் புதிய ரயில்கள்:

இதுதொடர்பாக, அவர் பேசியதாவது, “மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதியதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்திற்காக பணியாற்றி வருகிறது. தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கையான 800 கோடியை ஆயிரம் கோடியாக அதிகரிக்க உள்ளோம். இது அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்படும்.

ரயில்களில் பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இழு – தள்ளு முறையில் இது சாத்தியமாகும். இந்த முறையை அனைத்து பெட்டிகளிலும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். நீண்ட தூர ரயில்கள் நவீனப்படுத்தப்பட்டு பயண நேரம் குறைக்கப்படும்.

1000க்கும் மேற்பட்ட மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் கட்டவும், கட்டுமான பணிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 1002 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டது. இந்தாண்டு 1200-ஆக இலக்கு நிர்ணயித்துள்ளோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயிலுக்கு முக்கியத்துவம்:

மேலும், ரயில்வே வட்டாரங்களில் வெளியான தகவலாக ஆங்கில ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் ரயில்வே துறை 200 முதல் 250 கூடுதல் ரயில்களை ஆண்டுதோறும் உருவாக்கும் என்றும், இனி வரும் ஆண்டுகளில் 400 முதல் 450 வந்தே பாரத் ரயில்களும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் இயக்கப்பட்ட 562 ரயில்கள் தற்போது தினசரி ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1768ல் இருந்து 2 ஆயிரத்து 122 ரயில்களாக உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் 5 ஆயிரத்து 626 ரயில்களில் இருந்து 5 ஆயிரத்து 774 ரயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் 2 ஆயிரத்து 792 ரயில்களில் இருந்து 2 ஆயிரத்து 852 ரயில்களாக இயக்கப்படுவதாகவும், தினசரி நாடு முழுவதும் 10 ஆயிரத்து 748 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்களை இயக்கப்போவதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், புதியதாக இயக்கப்படும் ரயில்களின் கட்டணங்கள் சாமானியர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும், சொகுசு ரயில்களான வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களால் ஏற்கனவே அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சாதாரண ரயில்களின் பயண நேரங்கள் பாதிக்காத வகையிலும் செயல்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஈட்டியின் முனைகளே.. எழுங்கள்! கட்டிய நாய்களல்ல நாம்...- பொங்கி எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் படிக்க: MP Chhattisgarh Election LIVE: மந்தம்.. மதியம் 1 மணி நிலவரம்.. சத்தீஷ்கரில் 37% - மத்திய பிரதேசத்தில் 45.40% வாக்குப்பதிவு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
Trump US Election Reforms: வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
ABP Premium

வீடியோ

13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் டிஸ்மிஸ்- அண்ணாமலை கடும் கண்டனம்!
Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சே.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
பிரதமர் பதவியை காவு வாங்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்? நாட்டின் முதல் இஸ்லாமிய பிரதமர், யார் இந்த ஷபானா மஹ்மூத்?
Trump US Election Reforms: வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்
Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: SIR பணிகள் இன்று நிறைவு, தவெக தீவிரம், அமித் ஷா வருகை, ஜனநாயகன் வழக்கு - தமிழகத்தில் இதுவரை
Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி
Maruti Discount: ரூ.2.15 லட்சம் மிச்சம்..! மொத்த நெக்ஸா மாடல்களுக்கும் தள்ளுபடி, சலுகைகள் - மாருதி போட்ட வெடி
Embed widget