(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: ராகுல்காந்தியின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து..! என்ன காரணம்...?
ராகுல்காந்தி நாளை தமிழ்நாடு வரவிருந்த நிலையில், அவரது பயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (மே 21-ந் தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்துசெய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்து உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ராகுல்காந்தியால் நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சி
கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வராக டி.கே சிவகுமார் பதவி ஏற்றார். தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்றது.
கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வர், 8 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், இமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் ஷோரன், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா, தேசிய மாநாடு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தவிழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
IPL 2023, DC vs CSK: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு.. டெல்லி அணியுடன் இன்று மோதல்.. வரலாறு சொல்வது என்ன?
Vadivelu Songs : போடா போடா புண்ணாக்கு முதல் ராசாகண்ணு வரை.. வடிவேலு பாடிய பாடல்கள்