மேலும் அறிய

Rapidx Rail: வேற லெவல்! ரேபிட் எக்ஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...என்னென்ன வசதிகள்?

நாட்டில் முதல் ரேபிட் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

Rapidx Rail: நாட்டில் முதல் ரேபிட் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி  துவங்கி வைத்தார். இந்த ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும்  முயற்சி:

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் புதிய ரயில் சேவை அறிமுகமாக உள்ளது.  ஏற்கனவே பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில், புல்லட் ரயில் வரிசையில் தற்போது ரேபிட் (Rapidx) என்ற ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேபிட் எக்ஸ் ரயில்:

ரேபிட் ரயிலை பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த ரயில்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இது ஏரோ டைனமிக்ஸ முறையில் நீளமான மூக்குப்பகுதி கொண்ட ரயிலாக உருவாக்கப்பட்டுள்து. மேலும், இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த ரயில் அதிக வேகத்தில் பயணிக்கும். மெட்ரோ ரயில் போலவே இந்த ரயில் பயணிக்கு தண்டவாளங்களுக்கு ஜல்லி கற்கள் இல்லாத தண்டவாளங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.   தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்களை விட இதனின் வேகம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ரேபிட் எக்ஸ் ரயில் 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

டெல்லி டூ மீரட்:

இந்த அதிவிரைவு ரயில் டெல்லி-மீரட் இடையே இன்று துவங்கப்பட்டுள்ளது. டெல்லி - மீரட் இடையேயான ரேபிட் எக்ஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று துவங்கி வைத்தார். 17 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ரயில் செல்கிறது. ஷாஷிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டெப்போ என  5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு இடைவெளியில் இயக்கப்படும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

ஒவ்வொரு ரேபிட் எக்ஸ் (Rapidx) ரயில்களிலும் சுமார் 1,700 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 6 பெட்டிகள் உள்ளன. சாதாரண பெட்டியில் 72 இருக்கைகளும், பிரீமியம் பெட்டியில்  62 இருக்கைகளும் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கிறது. நின்று கொண்டே பயணிப்பவர்களுக்கு வசதியாக கைப்பிடிகள் இருக்கின்றன. இதுதவிர லக்கேஜ் வைப்பதற்கான வசதி, சிசிடிவி கேமரா, அவசர கால உதவிக்கான பட்டன், பயணிகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கும் வகையிலான மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி உள்ளிட்டவை இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
IND vs PAK T20 WC 2026: சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
IND vs PAK: சுழல்தான் முக்கியம்..! பெஞ்சில் உட்காரப்போகும் அர்ஷ்தீப்.. உள்ளேவரப்போகும் லெஜண்ட்?
IND vs PAK: சுழல்தான் முக்கியம்..! பெஞ்சில் உட்காரப்போகும் அர்ஷ்தீப்.. உள்ளேவரப்போகும் லெஜண்ட்?
Tarique Rahman: 17 ஆண்டுகால வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்- யார் இந்த தாரிக் ரஹ்மான்? மோடிக்கு வந்த சிக்கல்..
Tarique Rahman: 17 ஆண்டுகால வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்- யார் இந்த தாரிக் ரஹ்மான்? மோடிக்கு வந்த சிக்கல்..
ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
திருப்பி அடிப்போம்.. சாதாரணமாக நினைக்க வேண்டாம்.. திமுகவை சாடிய மாணிக்கம் தாகூர்!
IND vs PAK T20 WC 2026: சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
IND vs PAK: சுழல்தான் முக்கியம்..! பெஞ்சில் உட்காரப்போகும் அர்ஷ்தீப்.. உள்ளேவரப்போகும் லெஜண்ட்?
IND vs PAK: சுழல்தான் முக்கியம்..! பெஞ்சில் உட்காரப்போகும் அர்ஷ்தீப்.. உள்ளேவரப்போகும் லெஜண்ட்?
Tarique Rahman: 17 ஆண்டுகால வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்- யார் இந்த தாரிக் ரஹ்மான்? மோடிக்கு வந்த சிக்கல்..
Tarique Rahman: 17 ஆண்டுகால வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்- யார் இந்த தாரிக் ரஹ்மான்? மோடிக்கு வந்த சிக்கல்..
குறைந்த விலையில் அதிக டேட்டா: BSNL-க்கு மாற இதுவே சரியான நேரம்! நாளை முதல் சிறப்பு முகாம்!
குறைந்த விலையில் அதிக டேட்டா: BSNL-க்கு மாற இதுவே சரியான நேரம்! நாளை முதல் சிறப்பு முகாம்!
Tata Punch EV: அட்ராசக்க..! ஒரே சார்ஜ், 590KM ரேஞ்ச்.. மிரட்டும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், பேட்டரியில் டாடாவின் அப்க்ரேட்..
Tata Punch EV: அட்ராசக்க..! ஒரே சார்ஜ், 590KM ரேஞ்ச்.. மிரட்டும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், பேட்டரியில் டாடாவின் அப்க்ரேட்..
XSR 155 vs Hunter 350, எந்த பைக் பெஸ்ட்? மைலேஜ், செயல்திறன், விலை - ஒட்டுமொத்த கம்பேரிசன் பட்டியல் இதோ..!
XSR 155 vs Hunter 350, எந்த பைக் பெஸ்ட்? மைலேஜ், செயல்திறன், விலை - ஒட்டுமொத்த கம்பேரிசன் பட்டியல் இதோ..!
60 கிலோமீட்டர் வரை மைலேஜ்.. Yamaha FZ பைக்கில் இத்தனை வேரியண்ட்களா? விலை எப்படி?
60 கிலோமீட்டர் வரை மைலேஜ்.. Yamaha FZ பைக்கில் இத்தனை வேரியண்ட்களா? விலை எப்படி?
Embed widget