BJP Presidential Candidate: பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் திரெளபதி முர்மு..
BJP Presidential Candidate 2022: ஜூலையில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கானவேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும்.
இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் சரத் பவார் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சின்ஹா வரும் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
BJP-led NDA announces Draupadi Murmu name as Presidential candidate for the upcoming elections pic.twitter.com/4p1IOizaQ0
— ANI (@ANI) June 21, 2022
இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உயர்மட்டக் குழு இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசியதால் அவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பழங்குடித் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
Abpநாடு தளத்தில் திரெளபதி முர்மு, பாஜகவின் குடியரசுத்தலைவர் தேர்வாக இருப்பார் என கணித்து எழுதியிருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்