(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Metro Rail: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த சுவர் - ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி மெட்ரோ ரயில் பாதையின் ஒரு பக்கத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Metro Rail: டெல்லி மெட்ரோ ரயில் பாதையின் ஒரு பக்கத்தின் சுவர் இடிந்து விழுந்து, விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. இதில், நாள்தோறும் பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தான் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து:
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (டிஎம்ஆர்சி) பிங்க் லைனில் அமைந்துள்ள கோகுல்புரி மெட்ரோ நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இன்று காலை 11.04 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அதாவது, பிங்க லைனில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
கோகுல்புரி மெட்ரோ நிலையத்தில் பிங்க் லைன் ரயில் பாதையின் ஒரு பக்கத்தின் சுவர் இடிந்து சாலையில் விழுந்திருக்கிறது. அந்த சுவர் ரயில் பாதை பில்லருக்கு கீழே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர் மீது விழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்து, போலீசாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
देखिए क्या हुआ जब दिल्ली शाहीन बाग का एक लड़का बिना टिकट मुंबई लोकल में चढ़ गया 😉
— Arun Kumar (@Kamlesh95266197) February 8, 2024
मेट्रो स्टेशन का टिकट सिस्टम लोकल स्टेशन पर भी होने चाहिए @IndianRailMedia @RailMinIndia #DelhiMetro pic.twitter.com/HPMh82HbNm
அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 53 வயதான வினோத் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் காரவால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
2 பேர் உயிரிழந்த சோகம்:
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "சுமார் 40-50 மீட்டர் சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஜேசிபி மற்றும் கிரேன்கள் உதவியுடன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது கோல்புரி மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தும். காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.
மேலும், இதுகுறித்து மெட்ரோ நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த சம்பவம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.