மேலும் அறிய

PM Modi on Mahashivratri: 'எங்கும் நிறைந்த சிவன்'- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மகா சிவராத்திரி வாழ்த்து!

மகா சிவராத்திரி தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி:

சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவ ராத்திரி விரதம். சிவ ராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவ ராத்திரி, மாக சிவ ராத்திரி, யோக சிவ ராத்திரி, பட்ச சிவ ராத்திரி, மாத சிவ ராத்திரி ஆகும். இவற்றில் மகா சிவ ராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவது. அந்த வகையில் 2023 ம் ஆண்டு மகா சிவ ராத்திரி இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) வருகிறது. இன்று சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வருவதால், கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. 

பிரதமர் மோடி மகா சிவராத்திரி வாழ்த்து

இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “மகா சிவராத்திரியின் மிகச் சிறப்பான நாளில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மஹா சிவராத்திரியின் எல்லையற்ற நல் வாழ்த்துக்கள். எங்கும் நிறைந்த சிவன்!" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

சிவாலய வழிபாடு:

இதை ஒட்டி உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகாசிவாராத்திரியை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் தஞ்சை திலகர் திடலில் 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8. 15 மணி வரை டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினர் மங்கள இசை, மாலை 6.15 மணி முதல் 6.30 மணி வரை சிவனேசன், தீபக்ராஜா வழங்கும் திருமுறை விண்ணப்பம், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஆரம்ப விழா குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பிரபல சிவன் கோயில்களிலும், வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை

கோவையில் ஈஷாவின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டார். தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் விமான நிலையத்தில் இருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். மதிய உணவுக்குப் பிறகு  மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் கோவை செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார். 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காட்டுப்பாதையில் ஸ்கூட்டியுடன் மோதிய பெண்.. உடைந்த தந்தம்.. தெறித்து ஓடிய யானை
காட்டுப்பாதையில் ஸ்கூட்டியுடன் மோதிய பெண்.. உடைந்த தந்தம்.. தெறித்து ஓடிய யானை
Petrol: அமெரிக்கா - ஈரான் போரால்தான் பெட்ரோல் விலை ஏறுனுச்சா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க மக்களே
Petrol: அமெரிக்கா - ஈரான் போரால்தான் பெட்ரோல் விலை ஏறுனுச்சா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க மக்களே
பெங்களூர் விமான நிலையத்தில் பரபரப்பு.. நூலிழையில் உயிர் தப்பிய 179 பயணிகள்.. நடந்தது என்ன?
பெங்களூர் விமான நிலையத்தில் பரபரப்பு.. நூலிழையில் உயிர் தப்பிய 179 பயணிகள்.. நடந்தது என்ன?
PM Modi: ”மத்திய அமைச்சர்கள் டெல்லியை விட்டு வெளியே செல்லக்கூடாது” மோடி திடீர் உத்தரவு, முக்கிய ஆலோசனை
த்திய அமைச்சர்கள் டெல்லியை விட்டு வெளியே செல்லக்கூடாது” மோடி திடீர் உத்தரவு, முக்கிய ஆலோசனை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
முழுமை பெற்ற அமைச்சரவை; அண்ணா, பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வர் விஜய்- ஆதவ் அர்ஜூனா புகழாரம்
முழுமை பெற்ற அமைச்சரவை; அண்ணா, பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வர் விஜய்- ஆதவ் அர்ஜூனா புகழாரம்
Mk Stalin dmk : கடுஞ்சொற்களைப் பேசாதீங்க.! திமுகவினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்- காரணம் என்ன.?
கடுஞ்சொற்களைப் பேசாதீங்க.! திமுகவினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்- காரணம் என்ன.?
ADMK: அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாச்சே! சிவி சண்முகத்தால் புலம்பும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!
ADMK: அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாச்சே! சிவி சண்முகத்தால் புலம்பும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!
’’எங்ககிட்ட வச்சுக்காதீங்க’’ முகம் சுளிக்கவைத்த ஆ.ராசா; திமுகவை சுத்துப்போட்ட விசிக- நடந்தது என்ன?
’’எங்ககிட்ட வச்சுக்காதீங்க’’ முகம் சுளிக்கவைத்த ஆ.ராசா; திமுகவை சுத்துப்போட்ட விசிக- நடந்தது என்ன?
Petrol: அமெரிக்கா - ஈரான் போரால்தான் பெட்ரோல் விலை ஏறுனுச்சா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க மக்களே
Petrol: அமெரிக்கா - ஈரான் போரால்தான் பெட்ரோல் விலை ஏறுனுச்சா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க மக்களே
TN Ministers Portfolio: அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு என்ன துறை ஒதுக்கீடு.! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு என்ன துறை ஒதுக்கீடு.! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Embed widget