மேலும் அறிய

வடகிழக்கு மாநிலத்தின் வந்தேபாரத் ரயில்.. ஏப்.14ல் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதுவே வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தேபாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.

இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு சேவைகள் இருப்பதால் அந்த ரயிலின் கட்டணமும் மற்ற ரயில்களை காட்டிலும் அதிகளவில் உள்ளது. மும்பை முதல் அகமதாபாத் வரையிலான சிறப்பு வகுப்பு கட்டணம் ரூபாய் 2 ஆயிரத்து 349 ஆகும். சேர் கார் டிக்கெட் ரூபாய் 1, 144 ஆகும். 4-வதாக இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

நாட்டின் 5ஆவதும், தென் இந்தியாவின் முதலாவதுமான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது மைசூரூ சென்னை இடையே இயங்கிவருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காட்பாடி, பெங்களுரூ வழியாக நண்பகல் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 7.30 மணிக்கு சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

வந்தே பாரத் ரயில் வேகத்திலும், சேவையிலும், சுத்தத்திலும் மற்றும் பாதுகாப்பிலும் மற்ற ரயில்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதன் மூலமாக பயண நேரம் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையிலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருநு்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயில் வெறும் 8 மணி நேரத்தில் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகம் ஆகும். வந்தே பாரத் ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் தானியங்கி கதவுகள், இணைய வசதி, சொகுசான இருக்கை வசதி, கழிவறை வசதிகள் உள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் உணவுக்கூடம் இயங்கி உணவுகள், குளிர்பானங்கள் விநியோகிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் 1128 பயணிகள் பயணிக்க முடியும்.

வடகிழக்கு மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரயில்:

இந்நிலையில் வடகிழக்கு மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரயிலை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த ரயில் கவுஹாத்தி மற்றும் நியூ ஜல்பாய்குரி இடையே இயக்கப்படும். இதற்கான ஆயத்தப் பணிகளை வடகிழக்கு ஃப்ராண்டயர் ரயில்வே ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி ஏப்ரல் 14 பிஹு திருவிழா அன்று அஸ்ஸாம் வருவதால் அன்று நடக்கும் 11,140 நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கின்னஸ் சாதனைக்கான பிஹு நடன நிகழ்ச்சியையும் காண்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget