PM Modi's Interview: தொழில் செய்வது அரசின் வேலை கிடையாது - பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக 58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், ANI நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.
குடும்ப வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக 58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், ANI நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது நேர்காணலில்
தொழில் செய்வது அரசின் வேலை கிடையாது (The Government has no business to do business) என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சுத்தமான குடிநீர், கழிவறை , வீடு, மின்சாரம் போன்ற மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை அமல் செய்வதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியாக உள்ளது. ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் போக்கை கான முடிகிறது.
தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாஜக எழுச்சிமிகுந்து காணப்படுகிறது. அரிது பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.மாநிலங்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுகிறோம்.
Speaking to @ANI. Watch. https://t.co/z0ybGugG6V
— Narendra Modi (@narendramodi) February 9, 2022
ஒருமுறை மட்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு என்ற பழைய தேர்தல் நிலைப்பாட்டை உத்திர பிரதேச வாக்காளர்கள் ஏற்க மறுக்கின்றனர். 2014 தேர்தலில் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். எங்களின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் 2017ல் மீண்டும் வாய்ப்பளித்தனர். 2019 தேர்தலிலும் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். 2022 தேர்தலிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
உத்தர பிரதேசத்தைப் பொறுத்த வரையில், 2017ம் ஆண்டுக்கு முந்தைய அரசின் கொள்கை, மாஃபியா கும்பல் கொள்ளை அடிப்பதற்கான சுதந்திரத்தை அளித்தது. இன்று, முதல்வர் யோகியின் தலைமையின் கீழ், மாஃபியா கும்பல் ஓடி ஒளிந்து மன்னிப்புக் கோருகின்றனர். யோகியின் ஆட்சியின் கீழ் அவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
வெற்றி/ தோல்வி என்பதைத் தாண்டி சுய பரிசோதனை செய்யும் களமாகத் தான் பாஜக ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் திறந்தவெளி பல்கலைக்கழகமாக பார்க்கின்றோம். திறமையானவர்களை அடையாளம் காண்கின்றோம். முக்கியமாக, சுய பரிசோதனை செய்து கொள்கிறோம்.
இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி தனது நேர்காணலில் தெரிவித்தார்.
நேர்காணலின் போது, இந்தியில் வழங்கிய சில முக்கிய கருத்துகளின் தோராயமான தமிழ் மொழிபெயர்ப்பு இதுவாகும்.