மேலும் அறிய

Farmers' protest Full Recap : மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் போராட்டங்களும் - முழு ரீகேப்!!

ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை  சம்பவம் இந்தியாவின் குற்றமற்ற ஆத்மாவை கலங்கப்படுத்துவதாக அமைந்தது.

விவசாய மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இருப்பதாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.            

ஒரு வருடத்திற்கு மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின், இந்த போராட்டம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பேசும் பொருளானது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா  முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை  போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவளித்து வந்தனர்.  ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை  சம்பவம் இந்தியாவின் குற்றமற்ற ஆத்மாவை கலங்கப்படுத்துவதாக அமைந்தது.

Farmers' protest Full Recap : மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் போராட்டங்களும் - முழு ரீகேப்!!

மத்திய அரசு மோதல் போக்கை கைவிட்டு  உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை குரல்கள் எழுந்தது. இதற்கிடையே, 2021 அக்டோபர் 3-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவாசாயிகள் மீதி  மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றிய காட்சிகள் காண்போரை நிலை குலைய வைத்தது. இருந்தாலும், கடந்த மாதம் வரை வேளாண் சட்டங்களை திரும்பப் பேரும் பேச்சுக்கே இடமில்லை என்பதே அதிகாரத்தின் பதிலாக அமைந்தது. 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் விலகி தனிக்கட்சி தொடங்கிய, கேப்டன் அமரீந்தர் சிங், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.    

வேளாண் சட்டங்களும், விவசாய பெருங்குடிகளின் போராட்டமும்:        

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகிய மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.  குறைந்தபட்ச ஆதரவு  விலை கைவிடப்படும், வேளாண் விற்பனைக் குழு மண்டிகள் மூடப்படும் போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை தொடங்கினர். 2020 செப்டம்பர் 25ம் தேதி பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவாசாயிகள், டெல்லியை நோக்கிய பேரணியைத் (டெல்லி சலோ) தொடங்கினர். முதலில், ஹரியானா அரசு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், டெல்லிக்குள் விவசாயிகள் போரரட்டம் நடத்த டெல்லி அரசு அனுமதித்தது.   

Farmers' protest Full Recap : மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் போராட்டங்களும் - முழு ரீகேப்!!

2020 டிசம்பர் 3ம் தேதியன்று, மத்திய அரசுக்கும், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லியில் முதலாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று விவாசாயிகள் தெரிவித்தனர். சட்டத்திலும் பிரச்சனைக்குரிய விசயங்களை பேசித் தீர்த்திக் கொள்ளலாம் என்றும், சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை சகஜமான முறையில் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் தீர்வு காணப்படலாம் என்றும் இருதரப்பனரும் உறுதியாக  தெரிவித்தனர். ஆறாவது பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று வேளான் சட்டங்களை நிறுத்திவைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக 12.1.2021 தேதி ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.வேளாண் விலை குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் அசோக் குலாடி, ஷெட்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வாத், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தெற்காசிய இயக்குநர் டாக்டர் பிரமோத் ஜோஷி, அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவர் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்படும் விவசாயிகள், விவசாயிகளின் அமைப்புகளுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. 

Farmers' protest Full Recap : மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் போராட்டங்களும் - முழு ரீகேப்!!

வேளாண் சட்டங்களுக்கு ஆதாரவாளர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக போராடும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர், மேலும்,வேளாண் சட்டங்கள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து,  பூபிந்தர் சிங் மான் உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதற்கிடையே, மத்திய அரசுடனான பேச்சுவாரத்த்தை  தொடர்ந்து நடைபெற்றது. 10-வது சுற்று பேச்சுவாரத்தையில், புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருட காலத்திற்கு ஒத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில்  முடிந்தது. இதன்காரணமாக, மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

2021 அக்டோபர் 3-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவாசாயிகள் மீதி  மத்திய  இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றிய காட்சிகள் காண்போரை நிலை குலைய வைத்தது. இருந்தாலும், கடந்த மாதம் வரை வேளாண் சட்டங்களை திரும்பப் பேரும் பேச்சுக்கே இடமில்லை என்பதே அதிகாரத்தின் பதிலாக அமைந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget