நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சி எம், பிக்கள் போராட்டம்!
12 எம்,பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்,பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது.
அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டம் , விவசாயிகள் மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கூச்சலிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் கடந்த கூட்டத் தொடரின்போது அமளியில் ஈடுபட்டதாக , "தலைவரின் அதிகாரத்தை முற்றிலும் புறக்கணிப்பது, சபையின் விதிகளை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தல், அதன் மூலம் முன்னோடியில்லாத வகையில் தவறான நடத்தை, அவமதிப்பு, கட்டுக்கடங்காத மற்றும் வன்முறை நடத்தைகள் மூலம் வேண்டுமென்றே சபையின் அலுவல்களுக்கு இடையூறு விளைவிப்பதை இந்த சபை கவனத்தில் கொள்கிறது மற்றும் கடுமையாக கண்டிக்கிறது. ராஜ்யசபாவின் 254வது அமர்வின் (மழைக்காலக் கூட்டத் தொடரின்) கடைசி நாளில் அதாவது ஆகஸ்ட் 11, 2021 அன்று பாதுகாப்புப் பணியாளர்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டது, இதன் மூலம் இந்த ஆகஸ்ட் சபையின் கண்ணியத்தைக் குறைத்து, இந்த ஆகஸ்ட் சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், மேற்கண்ட கட்டாய காரணங்களுக்காக, இடைநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளனர். ராஜ்யசபாவில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 256 இன் கீழ் 255 வது அமர்வின் எஞ்சிய காலத்திற்கு இந்த உறுப்பினர்கள் சபையின் சேவையிலிருந்து:
2 திருமதி. பூலோ தேவி நெதம் (INC),
3. திருமதி. சாயா வர்மா (INC),
4. ஸ்ரீ ரிபுன் போரா(INC),
5. ஸ்ரீ பினோய் விஸ்வம் (சிபிஐ),
6 ஸ்ரீ ராஜாமணி படேல் (INC),
7. திருமதி. டோலா சென் (TMC),
8. ஸ்ரீமதி. சாந்தா சேத்ரி (TMC),
9. ஸ்ரீ சையத் நசீர் ஹுசைன் (INC),
10. ஸ்ரீமதி. பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா),
11. ஸ்ரீ அனில் தேசாய் (சிவசேனா),
12. ஸ்ரீ அகிலேஷ் பிரசாத் சிங் (INC).
ஆகிய 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டம் மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், 12 எம்,பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்,பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
Opposition leaders protest at Mahatma Gandhi statue in Parliament premises demanding revocation of suspension of 12 Opposition MPs of Rajya Sabha pic.twitter.com/v9IVEGjzby
— ANI (@ANI) December 1, 2021
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்