"எங்களுக்கு பெருமை” : குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பப்பூவா நியூ கினியா வர்த்தக ஆணையர்
பப்பூவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு, இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பப்பூவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு, இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு பாரம்பரியம் மற்றும் கலாசாரம் என்ற புத்தகத்தை வழங்கினார்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பதுதான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.
இதையும் படிக்க: வீட்டின் வெளியே படிக்கட்டில் ஒரு வாரமாக வசித்த வயதான தம்பதியினர்...தாமதித்த வாடகைதாரர்..என்ன நடந்தது?
இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இச்சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.
திரௌபதி முர்மு, குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் தேதி அன்று பதவியேற்று கொண்டார். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 64 வயதான திரெளபதி முர்மு, வியாழன் அன்று, எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார்.
முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெறுமையையும் பெற்றுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெறுமையும் முர்முவையே சாரும். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு விகித்தார்.
ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தை கொண்டவர் முர்மு. கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்