இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மொத்த பைலட்டுகளின் எண்ணிக்கை 17,726. இதில் பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை 2764. சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கொடுத்திருக்கும் தகவலின் படி உலகில் மொத்தம் இருக்கும் விமானிகளில் ஐந்து சதவிகித விமானிகள் பெண்கள். ஆனால், இந்தியாவில் பெண் விமானிகளின் பங்கு பதினைந்து சதவிகிதத்திற்கும் அதிகம் என்று கடந்த திங்கட்கிழமை ராஜ்ய சபாவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி.கே.சிங் தெரிவித்துள்ளார். அதாவது, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் பெண் விமானிகளின் பங்கு இரண்டு மடங்கு அதிகம்.

ஆனால் சமீபத்தில் இந்திய வணிக விமானிகள் அமைப்பு ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது  பெண்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுவதாகக் கூறி குற்றம் சாடியுள்ளது. கர்ப்பக்கால விடுப்பை எடுத்துக்கொண்டிருக்கும், எடுத்திருக்கும் பெண் விமானிகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள், பதவி உயர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அது கூறியுள்ளது.

அரசுத்தரப்பு கொடுத்திருக்கும் விளக்கம் என்னவெனில், அரசு எல்லா வகையிலும் நாடு முழுவதிலும் இருக்கும் பள்ளிகளில் படித்துகொண்டிருக்கும் சிறுவர்கள், குறிப்பாக சிறுமியர்களிடம் விமானப் போக்குவரத்துத் துறை குறித்தும் விமானிகள் ஆவதற்கான பயிற்சித் திட்டம், வேலை வாய்ப்பு குறித்தும் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கள நிலவரம் என்னவென்பது தெரியும்போது தான் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள என்னென்ன வழிகளை அரசு மேற்கொண்டிருக்கிறது, அது எவ்வளவு தூரம் பலனளிக்கிறது என்பது தெரிய வரும். அதுவரை இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை சர்வதேச அளவில் அதிகம் என்று மார்தட்டிக்கொள்ள வேண்டிய காரணங்கள் செல்லுபடி ஆகாது. பணியிடத்தில் அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கும் வரை எண்ணிக்கைகள் மீது மட்டும் கவனம் செலுத்துவது எந்த வகையில் நன்மை பயக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.

மேலும் படிக்க..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்