கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. ஒர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள், ஜூம் மீட்டிங் எனப் பல விஷயங்கள் நியூ நார்மலாகிவிட்டது.


இதனால் மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி அழையா விருந்தாளியாக பலருக்கும் வந்து சேர்ந்துள்ளது. இது பற்றி கொரோனாவுக்குப் பிந்தைய ஆன்லைன் வேலையில் சிக்கிக் கொண்ட நபர் ஒருவர் கூறும்போது, எனக்கு எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒற்றைத் தலைவலி உண்டு. ஆனால், கொரோனாவுக்குப் பின்னர் ஒரு மாதத்தில் 26 நாட்கள் கூட தலைவலியுடன் நகர்த்தி உள்ளேன். அதன் பின்னர் நான் ஒற்றைத் தலைவலியை சமாளிப்பதற்காக நான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். எனது ஸ்க்ரீன் டைமை குறைத்துள்ளேன். எனக்குப் பிடித்த வேலை எனக்கு அதிக ஸ்ட்ரெஸ் தருவதாக இருந்ததால் அதைக்கூட விட்டுவிட்டேன். நல் வாய்ப்பாக நான் சில நுணக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.


மருத்துவரிடம் பேசுங்கள்:


உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். நான் எனக்கு தலைவலி அதிகரிக்கும் போதெல்லாம், எனது நரம்பியல் மருத்துவரிடம் பேசுவேன். ஒவ்வொரு முறையும் எனது தலைவலியில் ஏதாவது ஒரு சின்ன மாற்றம் இருக்கும். அதைக் குறிப்பிட்ட மருத்துவரிடம் சொல்வேன். அவர் அதற்கு ஏற்றார் போல் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.


ஒற்றைத்தலைவலி போக்கும் கிட்:


நீண்ட காலமாகவே ஒற்றைத் தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளதால் நான் அதற்கான மருத்துவ உபகரண கிட்டை எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன். மென்தால் பலன் கொண்ட பேட்சுகளை எனது கழுத்துக்கும் முன் நெற்றிக்கும் பயன்படுத்துகிறேன். பின்னர் தலை, முகம், கழுத்துக்கு ஐஸ் பேக் ஒத்தடம் கொடுப்பேன். 


ஸ்க்ரீன் டைமை குறையுங்கள்:


ஒரு வேளை நீங்கள் கணிணியில் வேலை செய்பவராக இருந்தால் ஸ்க்ரீன் பயன்படுத்தும் நேரத்தை சற்றே குறைக்க முயற்சி செய்யுங்கள். எனது நிறுவனம் நான் சிறு சிறு பிரேக் எடுத்துக் கொண்டு வேலை செய்ய எனக்கு அனுமதியளித்தது. அதனால் எனக்கு ஸ்க்ரீன் டைம் மேனேஜ்மென்ட் சாத்தியமானது.




ஒற்றைத் தலைவலி போக்கும் கண்ணாடிகள்


ஒற்றைத் தலைவலி போக்கும் கண்ணாடிகளை வாங்கிப் பயன்படுத்தலாம். லைட் சென்ஸிடிவ் கண்ணாடிகளைப் பயன்படுத்தும் போது ஒற்றைத் தலைவலியில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஸ்க்ரீன் டைமை குறைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.


ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸை ட்ரை பண்ணுங்க:


அழுத்தம் நிறைந்த நவநாகரிக வாழ்வில் ஒற்றைத்தலைவலி போன்ற உபாதைகள் பக்கவாட்டு சீர்கேடு. அதனால் அவ்வப்போது உங்கள் மீதான அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். நான் சுடோகு, ஆடியோ புக்ஸ், பசிள்ஸ் என்று எனது கவனத்தைத் திசை திருப்புவேன். 


வெளியே ஒரு வாக் செல்லலாம்:


வீட்டுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடப்பதைவிட வெளியே ஒரு குறுநடை சென்று வரலாமே. நான் எப்போதும் நீண்ட தூரம் நடந்து செல்வேன். என் வீட்டு வாண்டுகளுடன் செல்வேன். அதுபோன்று உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீங்கள் செல்லலாம்.


உங்களுக்கு நீங்களே வழிகாட்டி:
அலுவலக ஜூம் கால் மீட்டிங்கிற்கு நான் வாய்ஸ் மட்டுமே ஆன் செய்து வைப்பேன். இப்படி சிற்சில விஷயங்களைப் பின்பற்றுவதால் ஸ்க்ரீன் டைமைக் குறைக்கலாம்.


ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம்:


சுவர் இருந்தால் தான் சித்திரம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. அதை நான் தனிப்பட்ட அனுபவத்தால் உணர்ந்து கொண்டேன். ஆகையால் எத்தனை பணிச் சுமை இருந்தாலும் கூட ஆரோக்கியத்தை முதன்மையானதாக வையுங்கள்.