மேலும் அறிய
Advertisement
Headlines 31 May: இதோ சுடச்சுட...! ஏ.பி.பி. நாடு -வின் காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் 15ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் - சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்
- தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை அமைத்திட ஒப்பந்தம் - ஜப்பானிய நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலயில் கையொப்பம்
- ஒருவார கால வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்புகிறார்
- மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு - அவர் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
- கத்திரி வெயில் நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் கோடை மழை - நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- விஷ வாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை - தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் தகவல்
- நெல்லையில் காரில் சென்ற நகைக்கடை அதிபரை இடைமறித்த இரண்டு கார்களில் வந்த கும்பல், மிளகாய்ப்பொடி தூவி 1.25 கோடி பணத்தை பறித்துச் சென்றுள்ளது
இந்தியா:
- ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே எடுக்கப்பட்டன - மத்திய பாஜக அரசு 9 ஆண்டுகளை பூர்த்தி செய்தது குறித்து பிரதமர் மோடி குறித்து
- பாலியல் புகாரில் பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை - ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச மல்யுத்த வீரர்கள் திரண்டதால் பரபரப்பு
- மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஒன்றிய மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம்பிடித்த ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி
- இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
- இந்திய வம்சாவளியினர், அமெரிக்க அரசியல் தலைவர்களை சந்திக்க, ஒரு வார பயணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்
உலகம்:
- ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது முதன்முறையாக உக்ரைன் ராணுவம் வான்வழித்தாக்குதல் - குடியிருப்பு கட்டடங்கள் சேதம்.. பொதுமக்களை குறிவைப்பதாக அதிபர் புதின் கண்டனம்
- வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளது - ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
- சாதாரண குடிமகன் உட்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா
- கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது தாக்குதல் - 40 வீரர்கள் காயம்
- நைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படை வீரர்கள் 9 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு
விளையாட்டு:
- சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்த சிஎஸ்கே அணி நிர்வாகம்
- 20 ஓவர் போட்டி விளையாடிய இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப மாறுவது சவாலாக இருக்கும் - முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - முன்னணி வீரரான ரஷ்யாவை சேர்ந்த மெத்வதேவ் - தரவரிசையில் 172வது இடத்தில் இருக்கும் தியாகோ செய்போத்திடம் அதிர்ச்சி தோல்வி
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - மகளிர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா, ஸ்வியாடெக்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion