மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகம் டூ உள்ளூர் செய்திகள்.. 1 நிமிடத்தில் உங்களுக்காக இதோ.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயிலின் தாக்கம்: அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரியும், சென்னையில் 105 டிகிரியும் பதிவானது.
- தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி உயரும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- பண்டைய கால மனித நாகரித்துக்கு அடுத்த சாட்சி; பொருநை அருங்காட்சியகம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் அச்சகம்
- கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட 7 பேர் பலி - 2 இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்
- இம்மாத இறுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி - அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட உத்தரவு
- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியதே காவல்துறையின் மிகப்பெரிய சாதனை - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
- திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகின்றார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
- ஏழை எளிய மக்களை தாங்கி பிடிக்கின்ற பண்புள்ள முதல்வர் நம் முதல்வர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
இந்தியா:
- காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
- கர்நாடக காவல்துறை தலைவரான பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
- கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.விற்காக பணியாற்ற அண்ணாமலையை அழைத்து வரும் ஆலோசனையை கூறிய நபருக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான சசிகாந்த் செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
- மியான்மர்- வங்கதேசம் இடையே கரையை கடந்தது மோக்கா புயல்- 200 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது
- ராகுல் காந்தியை ஆதரித்து விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று பதிவிட்டதாக வலம் வந்த ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலான நிலையில் அது போலியானது என்று தெரியவந்துள்ளது.
உலகம்:
- உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம் என ஜெர்மன் உறுதி; ரஷ்யாவை தாக்க உக்ரைன் படைகள் தயாராகிறது - உக்ரைன் அதிபர் தகவல்
- உக்ரைன் எல்லை அருகே 4 ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்
- உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடக்கம்
- சுவீடன் நாட்டில் நடைபெறும் மாநாட்டுக்கு இடையே 8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்தார்.
விளையாட்டு:
- பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் 21ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அதிர்ச்சி அளித்தது.
- ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோத இருக்கின்றன.
- எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion