மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: 4 நிமிடத்தில் உலகம் வரை செல்லுங்கள்.. இதோ! உங்களுக்காக காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- புதிதாக பதவியேற்ற டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை; 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம் - நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்
- இரண்டு துரோகிகளும் சேர்ந்து ஒரு அணி; காலியான டிடிவி கூடாரத்தில் ஓபிஎஸ் ஒட்டகம் நுழைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி கடும் சாடல்
- ஹான்ஸ், புகையிலைக்கு அரசு விதித்த தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு போல தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் விரைவில் அமலுக்கு வரும் - ஏ.டி.ஜி.பி. தகவல்
- சென்னையில் இன்று (மே.12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 356ஆவது நாளாக நீடித்து வருகிறது.
- 'திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது தான் என மீண்டும் நிரூபித்துள்ளனர்‘ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
- ‘புதிய அமைச்சர் பொறுப்பில் என் செயல்பாடுகள் பயனளிக்கும் என் நம்புகிறேன்' என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- மியான்மர் நோக்கி நகர்கிறது மோக்கோ புயல்; மிக தீவிர புயலாக மாறியது - வானிலை ஆய்வு மையம் தகவல்
- டெல்லி அரசு, ஆளுநர் இடையிலான மோதல் வழக்கில் மாநில அரசுக்குதான் அதிகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டது தவறு- உச்சநீதிமன்றம்
- பொக்ரான் அணு சோதனை 25வது ஆண்டு நிறைவு; செயற்கை நுண்ணறிவு திறனில் முன்னிலை பெற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
- ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- "பொறுப்பற்ற செயல்" மாணவர்கள் விடுதிக்கு சென்ற ராகுல்காந்திக்கு நோட்டீஸ் - டெல்லி பல்கலைக்கழகம் நடவடிக்கை
உலகம்:
- கைது செய்தது சட்டவிரோதம்; இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு
- புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் இருந்து 28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்.
- சீன விண்கலம் டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 50 மணி நேரம் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
விளையாட்டு:
- ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
- ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் கொல்கத்தா அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.
- 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- இன்றைய ஐபிஎல் தொடரில் 57வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion