மேலும் அறிய

மீண்டும் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்… மனிதர்களுக்கும் பரவுமா? மிசோரம் மக்கள் பீதி!

கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகளின் இறப்புக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்ஏஎஃப் எனப்படும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்து கால்நடைத்துறை முக்கிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் ஒரு பன்றியில் இருந்து அடுத்த பன்றிக்கு உமிழ்நீர், சுவாச குழாய் மற்றும் பூச்சிகள் பாதிக்கப்பட்ட பன்றிகளை கடித்த பிறகு உயிருடன் இருக்கும் பன்றிகளை கடிப்பதன் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளது. இறந்த பன்றிகளை மற்ற பன்றிகள் உண்ணும்போது வைரஸ் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தடுப்பூசி கிடையாது. மிசோரம் மாநிலத்தில் இந்த வகையான ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டது. இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதன்பிறகு புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு புதிதாக தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது. கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகளின் இறப்புக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்… மனிதர்களுக்கும் பரவுமா? மிசோரம் மக்கள் பீதி!

இதன் காரணமாக, சம்பாய் நகர் அதனை சுற்றிய பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர மிசோரம், மணிப்பூர் எல்லையில் உள்ள சகவர்தாய் கிராமத்திலும் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம தலைவர் சங்கதன்குமா பேசுகையில், ‛‛இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன'' என கூறியுள்ளார். இதனால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாநில கால்நடை பாராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் லால்மிங்தங்கா கூறுகையில், "சில கிராமங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பால் பன்றிகள் இறப்பு பதிவாகி உள்ளது'' என்றார். இருப்பினும் பன்றிகளின் இறப்பு குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இதுதொடர்பாக இன்று அம்மாநில தலைமை செயலாளர் ரேணு ஷர்மாவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முழுவிபரங்கள் வெளிவர உள்ளது என்று கூறப்படுகிறது.

மீண்டும் பரவும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்… மனிதர்களுக்கும் பரவுமா? மிசோரம் மக்கள் பீதி!

இந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், அதேநேரத்தில் இது பன்றிகளை அதிகமாக கொன்றுவிடும் எனவும் கால்நடைத்துறை கூறுகிறது. இதனால் மிசோரம் மாநில கால்நடைத்துறையினர் அதிக கவனம் செலுத்தி தடுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ​கடந்த ஆண்டில் மட்டும் மிசோராம் மாநிலத்தில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் ஆப்பரிக்கன் பன்றிக்காய்ச்சலாம் இறந்தன. இதற்கு ரூ.60.82 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கையாக 10,910 பன்றிகளும் அழிக்கப்பட்டன. இந்த பேரிழப்புக்கு வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள் தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது வங்கதேச எல்லையில் உள்ள தெற்கு மிசோரமின் லுங்கேய் மாவட்டம் லுங்சென் கிராமத்தில் தான் 2021 மார்ச் 21ல் முதல் முதலாக ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பதிவானது. அதன்பிறகு இது வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget