பிரதமரின் கோட்டையில் இப்படியா? கூண்டோடு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா... காரணம் என்ன?
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரிலுள்ள மகாத்மா மந்திரில் நடைபெற உள்ளது

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான குஜராத் அரசில் 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
பாஜகவின் கோட்டை:
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத பாஜகவின் கோட்டை என்றே சொல்லாம், 1998 ஆம் ஆண்டிலிருந்து அங்கு தற்போது வரை பாஜக ஆட்சியே நடைப்பெற்று வருகிறது, அந்த அளவுக்கு பாஜகவின் எஃகு கோட்டையாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. தற்போது பூபேந்திர படேல் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது அங்கு முதல்வரை தவிர 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இன்று முதல்வர் பூபேந்திர படேலின் இல்லத்தில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமாக்களுக்கு முன்பு, அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரை சந்தித்தனர். முதலமைச்சரைத் தவிர அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாக்களும் இந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
குஜராத் அமைச்சர்கள் சமர்ப்பிக்கும் ராஜினாமாக்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்களின் அனைத்து ராஜினாமாக்களும் தயாராக அமைச்சர்கள் தங்கள் ராஜினாமாக்களில் கையெழுத்திட்டிருந்தனர். மேலும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை.
பாஜக மாநிலத் தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா முதலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ஒன்றன் பின் ஒன்றாக ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாக்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன, அவர் அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
காரணம் என்ன?
பாஜக குஜராத்தில் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை கடந்த நிலையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்த முடிவெடுக்கப்பட்டது, இதன் காரணமாகவே மொத்தம் உள்ள 16 அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் பூபேந்திர படேலுக்கு வழங்கியுள்ளனர். அந்த ராஜினாமா கடிதங்களை முதல்வர் இன்று இரவு ஆளுநர் ஆச்சார்ய தேவவ்ரத்திடம் சமர்ப்பிக்கிறார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரிலுள்ள மகாத்மா மந்திரில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ராஜினாமா அமைச்சர்களின் பட்டியல்:
1.கனுபாய் தேசாய் - நிதி, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் (பர்தி)
2.பல்வந்த் சிங் ராஜ்புத் - தொழில்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (சித்பூர்)
3.ரிஷிகேஷ் படேல் - சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் உயர் கல்வி (விஸ்நகர்)
4.ராகவ்ஜி படேல் - விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் (ஜாம்நகர் கிராமப்புறம்)
5.குன்வர்ஜிபாய் பவாலியா - நீர் வழங்கல் மற்றும் சிவில் சப்ளைஸ் (ஜஸ்தான்)
6.பானுபென் பாபரியா - சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு (ராஜ்கோட் கிராமப்புறம்)
7.முலுபாய் பெரா - சுற்றுலா, காடு மற்றும் சுற்றுச்சூழல் (கம்பாலியா)
8.குபேர் டிண்டோர் - கல்வி மற்றும் பழங்குடியினர் மேம்பாடு (சாந்த்ராம்பூர் எஸ்டி)
9.நரேஷ் படேல் - காண்டேவி
10.பச்சுபாய் கபாத் - தேவ்கர் பரியா
11.பர்ஷோத்தம் சோலங்கி - பாவ்நகர் கிராமம்
12.ஹர்ஷ் சங்வி - மசூரா
13.நிக்கோலாக ஜகதீஷ் விஸ்வகர்மா
14.முகேஷ்பாய் ஜினாபாய் படேல் - ஓல்பாட்
15.குன்வாஜிபாய் ஹலபதி – மாண்ட்வி ( ST)
16.பிகுபாய் சதுர்சிங் பர்மர் - மோடாசா























