மேலும் அறிய

ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா

ஏக்நாத் ஷிண்டேவின் அரசியலுக்கு முடிவுரை எழுத சதியா? ஆட்சிக்கவிழ்ப்புக்கான அடித்தளமா?

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜராங்கே என்பவர் நீண்டகாலமாக போராடி வருகிறார். இந்நிலையில் 
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மனோஜ் ஜராங்கேவை சரிகட்டும் நோக்கில் பாஜகவிடம் இருந்து 500 கோடி ரூபாய் ஏக்நாத் ஷிண்டே மூலமாக அவருக்கு வழங்கப்பட்டதாக ஆடியோ ஒன்று வெளியானது.


மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா


 இந்த ஆடியோ ஆளும் தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஆடியோ வெளியான விவகாரத்தில் சதி உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. துணை முதல்வரும், சிவசேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பாஜகவை சேர்ந்த ஒரு தரப்பினர் சதி வேலையில் ஈடுபட்டதாக சிவசேனாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராம்தாஸ் கடம் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக முக்கிய நிர்வாகியான பிரவீண் தாரேகர், பாஜக மீது சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது எனவும், உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


ஏக்நாத் ஷிண்டேவுக்கு டார்கெட்டா?

யாரிடம் இருந்தும் தனக்கு பணம் வழங்கப்படவும் இல்லை, தான் பணம் வாங்கவும் இல்லையெனவும் மனோஜ் ஜராங்கே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, தன் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாகவும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்க முடியுமா எனவும் ஆடியோ வெளியீட்டார்களுக்கு சவால் விடுத்தார். சர்ச்சையான இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டின் மூலம் ஷிண்டேவின் அரசியலுக்கு முடிவுரை எழுதவும், ஆட்சியை கவிழ்க்கவும் வலை பின்னப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?
அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?
Ind US: ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
Embed widget