Lok Sabha Election Results 2024: மீண்டும் முன்னிலையில் மோடி.... உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு சறுக்கல்
Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் I.N.D.I.A கூட்டணி பெரும்பாணமை நெருங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலையில் உள்ளார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் 10.05 மணி , 4 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் I.N.D.I.A கூட்டணி பெரும்பான்மை நெருங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கடுமையான சவாலாக அமைந்துள்ளார். I.N.D.I.A கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடைசிகட்ட வாக்குப்பதிவுக்கு பின் பல்வேறு நிறுவனங்களால் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளில் வெற்றிபெரும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கருத்துக்கணிப்புக்கு எதிராக முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக I.N.D.I.A கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 260 இடங்களும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 260 இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் யார் வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.