மேலும் அறிய

Lal Bahadur Shastri Jayanti: எளிமையின் மறுபெயர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று! அறியாத விஷயங்கள்!

இன்று இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தாள்!

அக்டோபர்-2: இந்த தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளைதான் நமக்கு நினைவுப்படுத்தும். காந்தி பிறந்த தினத்தின், அவரது கொள்கைகளை பின்பற்றிய லால் பகதூர் சாஸ்தியின் பிறந்தநாளும் கூட. 

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பணியாற்றியவர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர். இப்படி தன் வாழ்நாளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

காந்தியின் அகிம்சை உள்ளிட்ட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் தனது வாழ்வை அர்பணித்தினார். எளிமை மற்றும் நிர்வாக திறன் ஆகியவற்றிற்கு பெயர்பெற்ற ஆளுமைமிக்க தலைவர்.  இவர் தனது 16-வது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றினார். சுதந்திர போராட்டில் தீவிரமாக ஈடுப்பட்டு பலமுறை சிறைக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

 இளமை காலம்:
 
லால் பகதுர் சாஸ்திரி 2 அக்டோபர் 1904 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசத்தில் வாரணாசியில் ஷரதா பிரசாத் மற்றும் ராம் துலாரி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை அலகாபாத்தில் உள்ள வருவாய் அலுவலகத்தில் எழுத்தராக பணிப்புரிந்தவர். சாஸ்திரிக்கு ஒரு வயதிலேயே அவர் தந்தை இறந்துவிட்டார். சாஸ்திரிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

லால் பகதூர் சாஸ்திரி பற்றிய அறியப்படாத தகவல்கள்;

  • லால் பகதூர் காசி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1925 இல் 'சாஸ்திரி' என்ற பட்டத்தைப் பெற்றார். 
  • சாஸ்திரி தனது பள்ளி நாட்களில், கங்கை நதியை தினமும் கடந்து செல்வார்.  தலையில் ஒரு துணி பையுடன் கங்கை நதியை, தினமும் பல முறை எளிதாகக் கடந்து செல்வார்.
  •  உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைச்சராக இருந்தபோது, ​​லத்தி சார்ஜ்க்குப் பதிலாக கூட்டத்தைக் கலைக்க ஜெட் விமானங்களைப் பயன்படுத்திய முதல் நபர் சாஸ்திரி ஆவார். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் பெண்களை நடத்துனர்களாக நியமிக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதை முன்னெடுத்த முதல் நபர் இவர்தான்.
  • குஜராத்தில் அமுல் பால் கூட்டுறவுக்கு ஆதரவளித்து, 1965 இல் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கி, பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கான தேசிய பிரச்சாரமான வெண்மைப் புரட்சியின் யோசனையை அவர் ஒருங்கிணைத்தார். 
  • இந்தியாவின் உணவு உற்பத்தியை ஊக்குவிக்க பசுமைப் புரட்சியை முன்னெடுத்தார்.
  • அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், ஊழலைச் சமாளிக்க முதல் குழுவை அமைத்தார். 
  • அவரது மகன் தனது வேலையில் தேவையற்ற பதவி உயர்வு பெற்றபோது, ​​அது சாஸ்திரியை எரிச்சலடையச் செய்தது, அவர் உடனடியாக பதவி உயர்வை மாற்றுவதற்கான உத்தரவை வெளியிட்டார். 
  • 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு, நாட்டில் கடும் வறட்சி நிலவியது. இந்த நிலைமைகளில் இருந்து வெளிவர, சாஸ்திரி நாட்டு மக்களை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டுக் கொண்டார், மேலும் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை நாட்டிற்கு வழங்கினார். 
  • லால் பகதூர் சாஸ்திரி கார் வாங்க வேண்டும் என்று அவரது மகன்கள் சொன்னதற்கு சம்மதித்தார். அப்போது ஃபியர் காரின் விலை 12 ஆயிரம் ரூபாய். இவரிடம் இருந்ததே 7 ஆயிரம் ரூபாய்.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கினார். கடன் முழுவதுமாக கட்டி முடிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார். வாங்கிய ரூ. 5,000 கார் கடன், அவரது, மனைவி  லலிதா லால் ஓய்வூதியத்திலிருந்து திருப்பிச் செலுத்தினார்.
  • இந்தியாவின் மிக உயரிய  விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர், லால் பக்தூர் சாஸ்திரி.
  • இவர் உள்துறை அமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
  • நாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, லாலா லஜ்பத் ராய், இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பை (Servants of India Society) ஏற்படுத்தினார். இந்த அமைப்பில் இருந்து சாஸ்திரி உதவித் தொகை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் 50 ரூபாய் உதவித் தொகைவழங்கப்பட்டது. அப்போது சாஸ்திரி போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். இவர் தனது மனைவிக்கு கடிதம் மூலம், உதவித்தொகை உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாய் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கிறாதா?  என்று கேட்டிருந்தார்.
  • லலிதா லால், கணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் அளித்தார்.  லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருப்பதாகவும், 40 ரூபாய் செலவு போக,  மாதம் 10 ரூபாய் சேமிப்பதாகவும் தெரிவித்தார்.
  • இதை தெரிந்து கொண்ட  சாஸ்திரி என்ன செய்தார் தெரியுமா?   உடனே இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.  அதில், தனது குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதுமானதாக இருப்பதாகவும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget