
இறந்த உடலில் 150 mg விந்து இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் மரணத்தில் மர்மம்; போலீஸ் விளக்கம்!
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. குறிப்பாக, டாக்டர் உடலில் 150 mg விந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவம், மக்களை கலக்கமடையச் செய்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
அதே சமயத்தில், சில பொய்யான தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து இந்த தகவல்கள் வெளியான போதிலும், இவற்றை காவல்துறை தரப்பு முற்றிலுமாக மறுத்து வருகிறது.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கில் காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்ட பதைபதைக்கும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கொல்லப்பட்ட மருத்துவரின் இடுப்பில் எலும்பு முறிவு? இந்த வழக்கில் கொல்லப்பட்ட மருத்துவரின் உடற்கூராய்வு, மாஜிஸ்திரேட் முன்பு நடத்தப்பட்டது. அதோடு, வீடியோவும் எடுக்கப்பட்டது. ஆனால், உடற்கூராய்வில் மருத்துவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், மருத்துவரின் இடிப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. இதனை காவல்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம்? இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்ககாதது ஏன் என நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருந்தது.
முறைப்படி, புகார் அளிக்கப்படாத பட்சத்தில், இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்வது வழக்கம். இயற்கைக்கு மாறான மரண வழக்குகளில் புகார் அல்லது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் கொலை விசாரணையாக மாறும்.
தற்கொலை, கொலை, விபத்து ஆகியவற்றை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. புகார் இல்லாத நிலையில் விசாரணையைத் தொடங்க இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
உடலில் 150 mg விந்து இருந்ததா? மருத்துவரின் உடலில் 150 மில்லி கிராம் விந்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மருத்துவரின் குடும்பத்தினர் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விந்து தொடர்பான தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதற்கு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
"கொல்லப்பட்ட மருத்துவரின் உடலில் 150 கிராம் விந்து கிடைத்ததாக யாரோ ஒருவர் கூறுகிறார். எங்கிருந்து இப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தது என்று தெரியவில்லை. மேலும் இது எல்லா வகையான ஊடகங்களில் பரவி வருகிறது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என கொல்கத்தா போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

