மேலும் அறிய

Kerala train fire incident: தீ விபத்தை நேரில் கண்டவர்கள் சாட்சி.. காத்திருந்த பைக்கில் ஏறி சென்ற மர்மநபர்... தீவிர விசாரணையில் காவல்துறை..

பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி பயணிகளின் ஆடைகள் மற்றும் இருக்கைகளை எரிக்க தொடங்கியது. இதனால், ரயிலில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு எலத்தூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் உயிரிழந்த தீ விபத்து திட்டமிட்டு நடந்ததாக காவல்துறையினர் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர், பைக்கில் தப்பி சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. 

இலத்தூர் காட்டு பகுதியில் இறங்கிய மர்ம நபர், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பைக்கில் ஏறி தப்பி சென்றதாக, நேரில் கண்ட சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது, இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் தெரியவில்லை. 

கேரள காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தை ஏற்படுத்திய நபர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், முன்பதிவு எதுவும் செய்யாமலும், பயணச்சீட்டு எதுவும் இல்லாமல் பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது. 

என்ன நடந்தது..? 

கேரள மாநிலம் ஆழப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ரயில் நேற்று இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சென்றபோது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஏறியுள்ளார். அப்போது ஏறிய நபருக்கும் அங்கிருந்த பயணி ஒருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை சக பயணியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதை பார்த்த மற்ற பயணிகள் தீயை அணைக்க முயன்றதில் தீக்காயம் அடைந்தனர். 

அந்த நேரத்தில், பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி பயணிகளின் ஆடைகள் மற்றும் இருக்கைகளை எரிக்க தொடங்கியது. இதனால், ரயிலில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சத்தம் கேட்டு பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்தபோது, ​​எலத்தூரில் உள்ள கோரபுழா ஆற்றுக்கு மேலே டி1 பெட்டி இருந்தது. ரயில் வேகம் குறைந்தவுடன் காயம் பட்ட சில பேர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தை ஏற்படுத்திய அந்த மர்ம நபர் ரயில் நின்றதும் இறங்கி தப்பி சென்றுள்ளார். 

பயத்தில் மற்ற பெட்டிகளில் இருந்த  பயணிகளும் நான்கு பெட்டிகளின் அவசர சங்கிலியை இழுத்து, தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இரவு 11.45 மணியளவில் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் டி1 பெட்டிக்கு பாதுகாப்புப் படையினர் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை 3 உயிரிழந்துள்ளதாகவும், 9 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget