‛நான் கறந்தா தரமாட்டேங்குது...என் மனைவிக்கு மட்டும் தருது...’ -பசு மாடு மீது போலீசில் புகார்!
பசுக்கள் பால் தரவில்லை எனக்கூறி கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசுக்கள் பால் தரவில்லை எனக்கூறி கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகையை காணோம், பணத்தை காணோம் என்று போலீசில் புகார் அளித்து பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் கிணத்தை காணோம் என்றுகூட போலீசுக்கு புகார் போவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒருவர் பசு பால் தரமாட்டேங்குது.... அட்வைஸ் பண்ணுங்க என்று புகார் மனுவுடன் காவல்நிலையத்தில் வந்து நின்றுள்ளார். இதைப்பார்த்த போலீசார் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம், சிவமொங்கா மாவட்டம், பத்ராவதி தாலுகா சித்லிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமையா. இவர் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பாலை பண்ணைகளில் விற்று வருமானம் ஈட்டி வருகிறார். இந்நிலையில் பால் கறக்க சென்றால் பசுமாடு அவரை எட்டி உதைத்து விடுமாம். அதுவே இவரது ,மனைவி சென்று பால் கறந்தால் அந்த பசுமாடு அமைதியாக அவருக்கு மட்டும் பாலை கொடுக்குமாம். இவர் பலமுறை அந்த பசுமாட்டிடம் பாலை கறக்க முயன்று தோற்று போய் உதை வாங்கியது தான் மிச்சம்.
இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “என்னுடைய 4 பசு மாடுகள் கடந்த 4 நாட்களாக பால் கறக்க மறுக்கிறது. காலையில் 8 மணிமுதல் 11 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் 6 மணி வரையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறேன்.
நன்றாக பால் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக பசுக்கள் பால் கொடுக்க மறுக்கின்றன. நான் வளர்த்து வரும் இந்த மாடுகள் நான் பால் கறந்தால் மட்டும் எனக்கு பால் தராமல், என் மனைவிக்கு மட்டும் பால் தருவதோடு என்னை எட்டி மிதித்து விடுகிறது. அதனால் இவற்றின் மீது புகாரளிக்க வந்துள்ளேன். அதற்கு அட்வைஸ் செய்து பால் கொடுக்க சொல்லுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். இதையும் படிக்கலாமே: டிகிரி இருக்கா? தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டத்தில் வேலை ரெடி!
ஆனால் போலீசார் அவரின் புகாரை நிராகரித்தனர். இதெற்கெல்லாம் புகார் எடுக்க முடியாது எனக்கூறி விவசாயியை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் இதேபோன்ற சம்பவம் ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது எருமை மாடு பால் கறக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்