அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நீங்கள் ஒரு உதாரணம்...முதல்வரை ஸ்டாலினை பாராட்டிய நடிகர் பவன் கல்யாண்
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளதாக நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 159 இடங்களில் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், திமுக 125 இடங்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் பல புதிய திட்டங்களுக்கு கையெழுத்து இட்டு யாரும் எதிர்பாராத வகையில் செயல்பட்டார். திமுக ஆட்சி ஏற்ற நேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனாவும் கோர தாண்டவம் ஆடிவந்தது. இதையெல்லாம், சமாளித்து ஆட்சியை மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார்.ABP Nadu Survey | கலைஞரைவிட ஸ்டாலினோட கொள்கை உறுதியா இருக்கு - மணி
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், அன்னை தமிழில் அர்ச்சனை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம், பெட்ரோல் விலை குறைப்பு என பல அறிவிப்புகளை அறிவித்து பல மாநில அரசுகளுக்கு முன்னோடியாக திகழ்வதால் பவன் கல்யாண் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளதாக திமுகவினர் கூறிவருகின்றனர்.
நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து.#CMMKSTALIN | @PawanKalyan pic.twitter.com/Sd9yX3qDwV
— DON Updates (@Don_Updatez) August 31, 2021
100 Days of CM MK Stalin: மக்கள் மனதை வென்றாரா முதல்வர் மு.க ஸ்டாலின்?