மேலும் அறிய

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு:

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிணையில் இருப்பதற்கும், விசாரணையை நடத்துவதற்ககும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், கெஜ்ரிவால் ஊழல் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் தொடர்பான மனுக்களை,  உச்ச நீதிமன்றம் பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா அடங்கிய தனி நீதிபதி அமர்வு, கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை மே 17ஆம் தேதி ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவாரா?

உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் என்பது, அவருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பானது மட்டுமே. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கும் வரை கெஜ்ரிவால் திகார் தான் சிறையில் இருப்பார்.

இடைக்கால ஜாமின் மேல்முறையீடு:

கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இருப்பினு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. தேர்தல் பரப்புரை முடிந்ததும் அவர் சிறையில் சரணடைந்தார்.  அதனை தொடர்ந்து, ஜாமின் கோரி கெஜ்ரிவால் சார்ரபில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் முடிவில் , கெஜ்ரிவாலுக்கு சாதகமாக இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. விசாரணை நீதிமன்றம் ஜாமின் உத்தரவு வழங்கி இருந்தமைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget