மேலும் அறிய

Indira Gandhi: இரும்பு மனிதி இந்திரா... இந்தியாவின் பிரதமரான தினம் இன்று!

இந்திராகாந்தி இந்தியாவின் இரும்பு மனிதியாக அறியப்படுபவர், பிரதமரான தினம்தான் இன்று. 

இந்திரா காந்தி இந்தியாவின் இரும்பு மனிதியாக அறியப்படுபவர் பிரதமரான தினம் தான் இன்று. 

அந்த இரும்பு மனுஷியைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை அறிவோமா?

Indira Gandhi: இரும்பு மனிதி இந்திரா... இந்தியாவின் பிரதமரான தினம் இன்று!

1. 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் நாள் பண்டிட் ஜவஹர்லால் நேரு, கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்தார். அப்போதைய அலகாபாத், இப்போதைய பிராய்க்ராஜ் தான் அவர் பிறந்த இடம். இந்திரா பிரியதர்ஷினி தான் அவரது இயற்பெயர்.

2. இந்திரா காந்தி, நேருவின் ஒரே மகள். செல்லமான மகள். அவர் இளம் வயதிலேயே தன்னை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். சிறுவயதில் அவர் ‘monkey brigade’ என்று கூறப்படும் வாணரப்படையை உருவாக்கினார். அந்தப் படையோடுச் சென்று பொது இடங்களில் இந்திய தேசியக் கொடியை விநியோகிப்பார். சில நேரங்களில் போலீஸாரின் நடமாட்டங்களைக் கண்டறிந்து இப்படை போராட்டக்காரர்களுக்கு துப்பு கொடுப்பதும் உண்டு.

3. விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், ஸ்விஸ் பள்ளிகள் மற்றும் பின்னாளில் சோமர்வில்லேவில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரியிலும் பயின்றுள்ளார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவருக்கு அலுவல் ரீதியான துணையாக அவருடன் வெளிநாடுகளுக்குச் செல்வார்.

4. 1959 ஆம் ஆண்டு இந்திரா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அதன் பின்னர் 1964ல் ராஜ்ய்சபா எம்.பி. ஆனார்.

5. 1966 ஆம் ஆண்டு, லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பின்னர் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி.

6. லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இந்திரா காந்தி, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.

7. 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் மாதம் வரையிலும், 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அவர் இந்தியாவில் நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் என்றப் பெருமையைப் பெற்றவர்.

Indira Gandhi: இரும்பு மனிதி இந்திரா... இந்தியாவின் பிரதமரான தினம் இன்று!

8. 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வென்ற பின்னர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

9. இந்திரா தனது ஆட்சியில் 14 வங்கிகளை தேசிய உடமையாக்கினார். வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உழைத்தார்.

10. 1975 ஆம் ஆண்டில், நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். 

11. அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் செய்தது.

12. ஜனதா கட்சியின் படுதோல்விக்குப் பின்னர், 1980ல் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானார். 

13. 1984 ஆம் ஆண்டு, அவர் மேற்கொண்ட ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Indira Gandhi: இரும்பு மனிதி இந்திரா... இந்தியாவின் பிரதமரான தினம் இன்று!

14. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று இந்திராகாந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் மொத்தம் 31 குண்டுகள் பாய்ந்தன. ஒரே ஒரு புல்லட் மட்டுமே அவரது உடலில் இருந்து தவறியது.

15. இந்திரா காந்தி அவரது மறைவுக்குப் பின்னரும் கூட பிரபலமானவராகவே இருந்தார். பிபிசி கடந்த 1999 ஆம் நடத்திய கணிப்பில் அவர் வுமன் ஆஃப் தி மில்லனியம் என்று அறிவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget