இனி இரவில் நிம்மதியாக ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.. புதிய விதிமுறைகளை அறிவித்த இந்திய ரயில்வே..
இரவு நேர பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே துறை சார்பாக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரவு நேர பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே துறை சார்பாக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறை என்பது மிகவும் பெரியது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு அனுபவம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கசப்பான அனுபவம் இருக்கும். பக்கத்து இருக்கையில் இருப்பவர்கள் சத்தமாக பேசுவது, மது அருந்திவிட்டு வருவது, மின் விளக்கை அணைக்காமல் இருப்பது இதையெல்லாம் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே துறை சார்பாக புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரயில்வே துறையில் புதிய இரவு நேர விதிமுறைகள்:
இருக்கையிலோ, ரயில் பெட்டியிலோ எந்தப் பயணியும் மொபைலில் உரத்த குரலில் பேச கூடாது.
இயர்போன் இல்லாமல் அதிக டெசிபலில் எந்தப் பயணியும் இசை கேட்க கூடாது.
இரவு விளக்கு தவிர, இரவு 10 மணிக்கு மேல் மற்ற விளக்குகளை எரிய வைக்கக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-போர்டு TTE அதாவது ரயிலில் இருக்கும் டிடி , கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்களும் ரயில்களில் பொது நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும், சக பயணிகளுக்கு சிக்கல்களை உருவாக்கினால் மக்களுக்கு வழிகாட்டவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ரயில் பெட்டிகளில் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும், இந்திய ரயில்வே விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மணிக்கு மேல் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
பயணிகளின் டிக்கெட்டைப் பார்க்க TTE வர கூடாது.
இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.
குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு உரையாட கூடாது.
நடு படுக்கையில் இருப்பவர்கள் தங்கள் படுக்கைகளை கீழே இறக்கினால், கீழ் படுக்கையில் இருப்பவர்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாது.
இரயில் சேவைகளில் ஆன்லைன் உணவு இரவு 10 மணிக்கு மேல் உணவு வழங்க கூடாது. இருப்பினும், இரவிலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் இரயிலில் உங்களின் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.