மேலும் அறிய

Election: மகாராஷ்ட்ரா, ஹரியானா, காஷ்மீருக்கு தேர்தல் எப்போது? இன்று தேதி அறிவிப்பு

மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த  சில மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தல் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்கள்  மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இன்று தேர்தல் தேதி அறிவிப்பு:

இதையடுத்து, அதற்கான தேர்தல் தேதிகள் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.  நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றாக திகழும் மகாராஷ்ட்ராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. அவர்களின் ஆட்சி நடப்பாண்டில் நவம்பர் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும், ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. அவர்களின் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்:

இதனால், மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்த இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீண்ட வருடங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாமல் உள்ள ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனால், காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

பா.ஜ.க.வுக்கு சவால்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்கள்  மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்து கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க.விற்கு இந்த சவால் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏனென்றால், சமீபத்தில்  பல மாநிலங்களில் நடைபெற்று முடிந்த 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றிருந்தது. இது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?
TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை! திருச்சியில் அதிர்ச்சி
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை! திருச்சியில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்Haryana BJP : காலைவாறும் EX-அமைச்சர்கள் திணறும் ஹரியானா பாஜக! வெடித்த உட்கட்சி பூசல்Udhayanidhi Stalin : உதயநிதியின் ஸ்கெட்ச்!அதிகாரிகள் ‘கப்சிப்’ மதுரையில் சம்பவம்!Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?
TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
Toll Tax in Highways: ஜிஎன்எஸ்எஸ் சுங்க வரி வசூல் முறை - இதை செய்தால் 20 கி.மீ.,க்கு கட்டணம் ரத்து - அரசு அதிரடி திட்டம்
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை! திருச்சியில் அதிர்ச்சி
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை! திருச்சியில் அதிர்ச்சி
வாக்கிங் சென்ற அதிமுக நிர்வாகி படுகொலை - வெளியான பகீர் காரணம்
வாக்கிங் சென்ற அதிமுக நிர்வாகி படுகொலை - வெளியான பகீர் காரணம்
வில்லங்க சொத்துக்கு பத்திரப் பதிவு: சொத்துகளை அபகரிக்க அரசே துணை போவதா?- எழும் கண்டனம்
வில்லங்க சொத்துக்கு பத்திரப் பதிவு: சொத்துகளை அபகரிக்க அரசே துணை போவதா?- எழும் கண்டனம்
தங்கச்சி கல்யாணத்திற்காக கஞ்சா கடத்திய அண்ணன்! போலீசில் சிக்கியது எப்படி?
தங்கச்சி கல்யாணத்திற்காக கஞ்சா கடத்திய அண்ணன்! போலீசில் சிக்கியது எப்படி?
முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்... ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு... காத்திருக்கும் சர்ப்ரைஸ்...
முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்... ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு... காத்திருக்கும் சர்ப்ரைஸ்...
Embed widget