Headlines Today, 27 Oct: கள்ளக்குறிச்சி பயங்கரம்... அண்ணாத்த டிரெய்லர் ரிலீஸ்..காதலனை கரம்பிடித்த இளவரசி..இன்னும் பல..!
Headlines Today, 27 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
![Headlines Today, 27 Oct: கள்ளக்குறிச்சி பயங்கரம்... அண்ணாத்த டிரெய்லர் ரிலீஸ்..காதலனை கரம்பிடித்த இளவரசி..இன்னும் பல..! india tamil news headlines today latest news updates in tamil Headlines Today, 27 Oct: கள்ளக்குறிச்சி பயங்கரம்... அண்ணாத்த டிரெய்லர் ரிலீஸ்..காதலனை கரம்பிடித்த இளவரசி..இன்னும் பல..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/48a388353331f40d6c908aab313239ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடை ஏற்பட்ட தீ விபத்தி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
* அதிமுக அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்து சிசிடிவியை அகற்றினோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலிதாவுக்கு பிரவேசி தேவைப்படுவதாக அரசு கூறியதால் அகற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது.
* அதிமுக கொடியுடன் அரசியல் சுற்றுப்பயணத்தை பயணத்தை துவங்கிய சசிகலா, ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
* பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரேநாளில் 141 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவால் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா
* ஆர்யன்கான், அனன்யா பாண்டேவுடன் நடத்திய வாட்ஸ் அப் சேட் கசிந்துள்ளது. அந்த வாட்ஸ் அப் உரையாடலின்படி, ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் தொடர்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
* கட்சியில் கட்டுப்பாடு, ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. இவை இருந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும் என அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேச்சு
உலகம்
* உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.52 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 22.23 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 49.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
* ஜப்பான் இளவரசி மகோ தனது காதலர் கொமுரோவை திருமணம் செய்துக் கொண்டார். ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த பல கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.
பொழுதுபோக்கு
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
* தாதா சாகேப் பால்கே விருதுக்காக வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.
விளையாட்டு
* வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
* மற்றொரு போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)